என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "debt troublesome"
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் இவரது தம்பி கோபி (வயது 34) இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தனர்.
இருவருக்கும் மது பழக்கம் இருந்து வந்தது. இதனால் ஊரை சுற்றிலும் கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த 2 பேரும் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதனை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் நேற்று இறந்தார்.
கோபி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (34). இவரது மனைவி தவமணி (31). இவர்களுக்கு 3 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தை இருந்தது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு கவுண்டம்பாளையத்தில் சதிஷ்குமார் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
சதிஷ்குமார் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் மிரட்டி உள்ளனர்.
இதனை மன வேதனை அடைந்த சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்தார்.
இதில் சதிஷ்குமார் மற்றும் அவரது குழந்தை மோனிகா சம்பவ இடத்திலே மூச்சு திணறி இறந்தனர். தவமணி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து அவினாசி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் குழந்தையுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாதி செர்லா கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம்(39), இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு மகேஷ் குமார் (11) திரிஷா (6) என்ற மகன், மகள் உள்ளனர்.
புருஷோத்தம் திருப்பதியில் உள்ள பி.டி.ஆர் காலனியில் தங்கியிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
அவர் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் புருஷோத்தம் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்து, கொடுத்த கடனை திருப்பி கேட்டனர்.
இதனால் மனமுடைந்த புருஷோத்தம் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணினார். தன்னுடைய மகன், மகளை தூக்கில் தொங்கவிட்டு கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கியுள்ளனர். அப்போது திரிஷா வலியால் கூச்சலிட்டார்.
திரிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து வீட்டினுள் ஓடிவந்தனர். அப்போது அங்கு 4 பேரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தூக்கில் தொங்கியவர்களை மீட்டனர்.
ஆனால் புருஷோத்தம், அவரது மனைவி பத்மாவதி, மகன் மனோஜ்குமார் ஆகியோர் இறந்துவிட்டனர். திரிஷா மட்டும் உயிர் தப்பினார். அவரை மீட்டு ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தகவல் அறிந்த திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், திருப்பதி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து திருப்பதி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பான்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (47). இவர் சந்தவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார்.
ஓட்டலில் வியாபாரம் சரியாக இல்லாததால் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். கடன் தொல்லை தாங்காமல் ராஜேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். #tamilnews
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் புதுநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). பாப்ஸ்கோ ஊழியர்.
இவருக்கு காமாட்சியம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் இளைய மகளும் திருமண வயதில் உள்ளார்.
இந்த நிலையில் 2 மகள்களுக்கு கடன் வாங்கி திருமணம் செய்து வைத்திருந்த நிலையில் சம்பளம் வழங்கப்படாததால் ராமச்சந்திரன் அந்த கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்தார்.
அதோடு இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்து வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு ராமச்சந்திரனை வலியுறுத்தி வந்ததால் விரக்தியில் இருந்து வந்தார்.
இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தொங்கினார்.
அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பளம் வழங்கப்படாததாலும், கடன் தொல்லையாலும் வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதேபோன்று சம்பளம் வழங்கப்படாததால் கடன் தொல்லையில் பாப்ஸ்கோ ஊழியர் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் குன்னங்கல் பாளையம் பிரிவு சிவன்மலை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). பூ வியாபாரி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை செல்வராணி அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த செல்வ ராணி அலறி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூ வியாபாரி சிவக்குமார் சிறுசிறு கடன் வாங்கி இருந்தார். அதனை செலுத்த முடியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகக போலீசார் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்