search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Bill"

    • டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
    • மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு என்ன தார்மீக அதிகாரம் உள்ளது? என்று கேள்வி.

    மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 25 ஆண்டுகளாக 6 தேர்தல்களில் டெல்லி மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறாத பாஜக இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ப.சிதம்பரதம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இரு அவைகளும் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளன. இந்த மசோதாவை டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (வைஸ்ராய் நியமனம்) மசோதா என்று சரியாகத் தலைப்பிடப்பட வேண்டும். "அரசாங்க பிரதிநிதித்துவம்" மற்றும் "பாராளுமன்ற ஜனநாயகம்" இரண்டும் இந்த மசோதாவால் கைவிடப்பட்டுள்ளது.

    25 ஆண்டுகளாக 6 தேர்தல்களில் டெல்லி மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறாத பாஜக இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

    டெல்லி அரசை நகராட்சியாகக் குறைக்கும் அத்தகைய மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு என்ன தார்மீக அதிகாரம் உள்ளது?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×