என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Department of School Education"
- 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
- 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.
2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அதன்படி, அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது.
இதைதொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.
இந்நிலையில், 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றரிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும்.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது.
வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.
இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும்.
இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு.
- பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை:
படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகைகள் மாணவ-மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுவதால் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருவாரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
- தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.
இதில் தில்லை விளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.
கேடயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை தேர்வு.
- வினாத்தாள்கள் முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
மேலும், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கு முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
- மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கடலூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் கிருட்டிணன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை இணை பேராசிரியர் ராமகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் என் எஸ் எஸ் உதவி பேராசிரியர் அருள்தாஸ் நன்றி கூறினார்.
- 14 ஆயிரத்து 19 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.
- ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்து இருக்கிறார்.
சென்னை:
பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 19 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.
இந்த பணியிடங்கள் நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை மாணவ-மாணவிகளின் கல்வி நலன் கருதி, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14 ஆயிரத்து 19 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்தும், ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்து இருக்கிறார்.
- சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
- 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
சென்னை:
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த உள்ளன.
இந்நிலையில், சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
வாசர்களின் திருவிழாவில் இந்தாண்டு திருநங்கைகள் / பால்புதுமையினர் இலக்கியங்கள் இடம்பெற உள்ளதாக பா.ப.சி.-யின் செயலாளர் எஸ்.கே. முருகன் தெரிவித்துள்ளார்.
- பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு.
- தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம்.
மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் உறுதிமொழி படிவம் பெற்றது உறுதிபடுத்தப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.
- தமிழ், ஆங்கிலம் பாடவேளைகள் வாரத்திற்கு 6 ஆக குறைக்கப் பட்டுள்ளது.
- சமூக அறிவியல் பாடவேளை வாரத்திற்கு ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தபடுவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கடந்த செப்டம்பர் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த 1-ந் தேதியும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.
தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை மார்ச், ஏப்ரல், மாதங்களில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.
எனவே மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக 2 மாதங்கள் தள்ளிவைத்து பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்...வடகிழக்கு பருவமழை- தமிழகத்தில் 61 சதவீதம் இதுவரை கூடுதலாக பெய்துள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்