என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dev"

    கார்த்தி நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Dev
    பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை டிசம்பர் 29ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 5 பாடல்களை உருவாக்கி இருக்கிறார்.



    சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்படம் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் ரகுல் பிரீத் சிங், தற்போது இந்தி படத்திற்காக ஒரு விஷயம் ஒன்று செய்திருக்கிறார். #RakulPreetSingh
    ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். எல்லாமே முன்னணி கதாநாயகர்களின் படங்கள். சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என தமிழில் முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்து வருகிறார்.

    சில நடிகைகள் தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக இருப்பார்கள், இன்னும் சிலர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருப்பார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்றிலும் பிசியாக நடிக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில்தான் தற்போது இணைந்துள்ளார் ரகுல் பிரீத் சிங். 2014-ல் தனது முதல் இந்திப் படத்தில் நடித்த அவர் தற்போது தே தே ப்யார் தே படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஓர் இந்திப்படத்தில் தான் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார் ரகுல்.



    இயக்குநர் மிலாப் சாவேரி இயக்க, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கும் மர்ஜவான் எனும் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக சில மாதங்களாகவே கடுமையான உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த ரகுல் அதன் பலனாக உடல் எடையை கணிசமாக குறைத்து ஒல்லியான உடலுக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இது ரகுலா? இல்லை இலியானாவா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
    அப்போ சூர்யாவிற்காக குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இப்போ கார்த்திக்காக தேவ் படத்தில் குரல் கொடுத்திருக்கிறார். #Dev #Karthi #Suriya
    கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தேவ்’. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதற்கு முன் சூர்யாவிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘7ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா...’ என்ற பாடலை பாடியிருந்தார்.



    இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வைரலானது. #Dev
    கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேவ்’ படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். #Karthi #Suriya
    பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.



    சென்னை, ஐதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவ்’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. #Dev #Karthi #RakulPreetSingh
    பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது. ஏற்கனவே தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று. 



    அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர். அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் கட்சிகளும், மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமாலய மலையில் படமாகிறது. புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சண்டைக்காட்சிகளுக்கு சண்டை பயிற்சி அன்பறிவ். தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்குகிறது.

    உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் பஸ்ட்லுக் விரைவில் வெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ‘தேவ்’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Karthi
    கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப். மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

    விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப், கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.



    இந்தப் படம் பாபநாசம் படம் போலவே திரில்லராக தயாராக இருக்கிறது. ஜித்து ஜோசப் இந்தியில் ‘தி பாடி’ என்ற படத்தையும், மலையாளத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு தற்போது ‘தேவ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
    ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் தேவ் படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட ரகுல் ப்ரீத் சிங்குக்கு, பிறந்தநாளுக்கு முன்னதாகவே கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது. #Dev #RakulPreetSingh
    ரகுல் பிரீத் சிங் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தான் அவரை முன்னணி கதாநாயகியாக வளர்த்தது. மீண்டும் தமிழுக்கு வந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு தேவ் படத்திலும் ஜோடியாகி இருக்கிறார்.

    சென்னை, ஐதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். பொருட்சேதமும் ஏற்பட்டது.

    இதனால் தேவ் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதுடன் படக்குழுவினரும் அங்கிருந்து வர சிரமப்பட்டனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரகுல் பிரீத் சிங்கின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.

    முக்கிய நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்பை முடித்தால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அவர்களை வழியனுப்பி வைப்பது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
    அதோடு வரும் அக்டோபர் 10-ம் தேதி ரகுல் பிறந்தநாள் வருவதால் முன்கூட்டியே அதையும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 21-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. #Dev #RakulPreetSingh #Karthi

    ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி வரும் `தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடக்கவிருந்த நிலையில், கடும் மழை வெள்ளத்தால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. #Dev #Karthi
    `கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். 

    மேலும் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் `தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்று வந்தது. அதற்காக படக்குழு குலு மணாலி சென்றிருந்தது.

    இந்த நிலையில், கனமழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுபற்றி நடிகர் கார்த்தி கூறும் போது, 



    23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும், அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பால் தயாரிப்பாளருக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Dev #Karthi #RakulPreetSingh

    கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள். #Karthi17
    கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

    சூர்யாவின் ‘சிங்கம் 2’, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.



    இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கார் சேசிங்குடன் தொடங்கி இருக்கிறார்கள். #Karthi #Dev
    கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது.

    அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், “சிங்கம் 2“, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

    முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன், காமெடி, அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.

    இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும், மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

    கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி, ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.
    கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த சில தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi17 #RakulPreetSingh
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் ஜூலையில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், கார்த்தி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் ஒரு கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல்பிரீத்தி சிங் நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இணைந்து நடித்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.



    கார்த்தி, ரஜத் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு `தேவ்' என்னும் பெயரை சூட்டலாம் என்று ஆலோசனை நடக்கிறது. கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். #Karthi17 #RakulPreetSingh

    ×