search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhadak"

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.
    • ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.

    பின் நாட்களில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கூர்மையான சமூக அரசியல் கருத்துக்களை கூறுவதற்கு பரியேறும் பெருமாள் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் சமீபத்திய படங்களில் தவிர்க்க முடியாத கிளாசிக் படமாக மாறியது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் 'தடக்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 'தடக் 2' என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார்.

     

    சித்தாந்த் சதுர்வேதி மற்றும் துருப்தி டிம்ரி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோவில் , கல்வி, கிளர்ச்சி, வகுப்பு மற்றும் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான பல முழக்கங்களைக் காண்பிக்கும் சுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது. தலித் காதல் முக்கியம், உங்கள் சிந்தனையை மாற்றுங்கள், சமூகத்தை மாற்றுங்கள், அமைதியைக் குலைக்க காதலர்கள் இங்கே இருக்கிறார்கள், மற்றும் எதிர்ப்பு சமத்துவமாகிறது உள்ளிட்ட வாசனகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அதே சுவரில் ஒரு காலத்தில் ஒரு ராஜா, ஒரு ராணி இருந்தார்கள். அவர்களின் சாதிகள் வெவ்வேறாகும், இதனால் கதை முடிந்தது என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் `தடக்' படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. #Dhadak #JhanviKapoor
    ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் ‘தடக். இஷான், ஜான்வி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சஷாங் கைட்டான் இயக்கி உள்ளார். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

    அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.

    ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம் மராத்தியில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அங்கும் வசூல் சாதனை புரிந்தது. சாதிய ஆணவக் கொலை இந்தியா முழுக்க உள்ள பிரச்சினை என்பதால் இந்தியிலும் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. #Dhadak #JhanviKapoor #IshaanKhattar

    தடக் படம் மூலம் இந்திப் படத்தில் அறிமுகமாகும் ஜான்வி, தனது அம்மா ஸ்ரீதேவியின் வழியை பின்பற்ற வில்லை என்று கூறியிருக்கிறார். #Jhanvi
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தியில் தடக் படம் மூலம் அறிமுகம் ஆகிறார். இவர் மராத்தியில் வரவேற்பை பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்காக ‘தடக்’ உருவாகி இருக்கிறது. சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    ஜான்வி அவரது தாய் ஸ்ரீதேவி போலவே இந்திய அளவில் பெரிய நடிகையாக விரும்புவதாக செய்திகள் வந்தன. இதற்கு பதில் அளித்துள்ள ஜான்வி, ‘நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. 



    என்னை பொறுத்தவரை ஒரு மொழியில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அம்மா போல ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை’ என்று கூறி இருக்கிறார்.
    ஜான்வி கபூர் நடிப்பில் தடக் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், பாதுகாவலர்கள் இன்றி வெளியே சென்ற ஜான்வியை பார்க்க கூடிய ரசிகர்கள் அத்துமீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. #JhanviKapoor #Dhadak
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். இவர் மராத்தியில் வரவேற்பை பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்திருக்கிறார். சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குடும்பத்தினர் இல்லாமல் தனியாகவே செல்கிறார். அந்த வகையில், மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாக சென்றார். 

    ஜான்வி வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் மற்றும் சிறுவர்கள் பலரும் அந்த ஓட்டல் முன்பு திரண்டனர். வெளியே வந்த ஜான்வியிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் அவர்கள் முண்டியடித்தனர். அப்போது அவர்களுடன் ஜான்வி சிரித்தபடி உரையாடினார். மேலும் ரசிகர்கள் கூட்டத்திலும் சிக்கினார். 



    அப்போது சிலர் அத்துமீறி ஜான்வி கையை பிடித்து இழுத்தனர். முகத்திலும், முதுகிலும் தொட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து கூட்டத்தினரை விலக்கி, ஜான்வியை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். #JhanviKapoor #Dhadak

    ×