search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhansika"

    கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `யோகி டா' படத்திற்கு `லூசிபர்' பட பிரபலம் தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். #YogiDa #Dhansika
    தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. கவுதம் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்தில் தன்ஷிகாவுடன் கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதை காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது.

    ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `லூசிபர்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    கவுதம் கிருஷ்ணா - ஹிமேஷ் பாலா இணைந்து இந்த படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர். #YogiDa #Dhansika #DeepakDev

    பரதேசி, கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. #Dhansika #Uchakattam
    பரதேசி, கபாலி படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் தன்ஷிகா. அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ படம் வரும் 22-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    இந்தப் படத்தை கன்னட இயக்குனர் சுதீல் குமார் தேசாய் இயக்கி உள்ளார். இவர் திரில்லர் படங்கள் எடுப்பதில் புகழ் பெற்றவர். இந்தப் படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து அனூப் சிங், கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ், தான்யா ஹோப், ஆடுகளம் கிஷோர், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தை டி கிரியஷேன்ஸ் சார்பில் ஆர்.தேவராஜ் தயாரித்துள்ளார். அனூப் சிங் சிங்கம் 3 படத்திலும் கபீர் சிங் வேதாளம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்கள். தான்யா ஹோப் சமீபத்தில் வெளியான தடம் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.



    திரில்லர் படமாக உருவாகியுள்ள உச்சகட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஒரு பெண் கால்களில் ரத்த காயங்களுடன் நடந்து வரும் காட்சியை பார்க்கும் சாய் தன்ஷிகா பயத்தில் மிரண்டு போவது போல் வெளியாகி இருந்தது. அடுத்து வெளியான டிரெய்லரில் சர்ச்சையான காட்சிகள் சில இடம்பெற்று இருந்தன. எனவே படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் யோகி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தன்ஷிகா, மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Dhansika #YogiDa
    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் 'யோகி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தன்ஷிகா. ஒரு ஆணுக்கு இணையான கம்பீர தோற்றத்துடன் கையில் துப்பாக்கியுடன் ஒரு புரொபஷனல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது உடல் மொழியாலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

    இதே போல் தான் எடுக்கும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி நடிக்கும் இயல்பு கொண்ட தன்ஷிகா சினிமா உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே அதிகரித்துள்ளது. 

    ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் "யோகி டா" என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். கவுதம் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தின் திரைக்கதை, கதாநாயகியை மையப்படுத்தி காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கவுதம் கிருஷ்ணாவுடன், ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர். 

    தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க, வேதாளம், காஞ்சனா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வரும் கபீர் சிங் இதில் வில்லனாக நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 



    இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசி்குமாரும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதிரியான இஷ்ராத் காதறியும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ், கவுதம் கிருஷ்ணா, ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர் ஆகியோரும் பணிபுரி்கின்றனர். 

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்று, டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. 
    பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகா, குரு வணக்கத்துடன் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். #Dhanshika
    பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. இன்று தனது பிறந்த நாளை சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.



    ரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின்  முத்தாய்ப்பாக தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.
    எம்.நாகராஜன் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன் - தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாகி இருக்கும் `காலக்கூத்து' படத்தின் விமர்சனம். #Kaalakkoothu
    பிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே காதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை மறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார். 

    ஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம் தவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு அவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் கவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.



    மற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன் திருமணம் செய்துக் கொள்கிறார். கோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

    இறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன், தன்ஷிகா இருவரும் தப்பித்தார்களா? கவுன்சிலர் மகனிடம் இருந்து பிரசன்னா தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா, சோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால், இவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.

    மற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்‌ஷன், ரொமன்ஸ் என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    முதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும், மதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். இரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து சென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது போல் தோன்றுகிறது.



    மதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக வேகம் எடுத்திருக்கிறது. பழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி இருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது பலவீனம். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘காலக்கூத்து’ ஆடியிருக்கலாம். #Kaalakkoothu #KaalakkoothuReview #Prasanna #Kalayarasan

    ×