என் மலர்
நீங்கள் தேடியது "Dhanya"
- பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி தானியாவுக்கு 2 கட்டமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
- ஆவடி பட்டாபிராம் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி தானியா வீட்டுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார்.
சென்னை:
ஆவடியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்-சவுபாக்கியா. இவர்களது மூத்த மகள் சிறுமி தானியா (வயது 9) முக சிதைவு நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆவடி நாசரை தொடர்பு கொண்டு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி தானியாவுக்கு 2 கட்டமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று ஆவடி பட்டாபிராம் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி தானியா வீட்டுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, நாசர் ஆகியோர் உடன் சென்றனர்.
- சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
- 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
சென்னை:
ஆவடி வட்டம், மோரை பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் -சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் தானியா அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.
தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8.2.2023 அன்று 2-வது முறையாக முக சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக சிறுமி தானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
அப்போது சா.மு.நாசர் எம்.எல்.ஏ. மற்றும் சிறுமி தானியாவின் பெற்றோர் உடன் இருந்தனர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பா. இரு சம்மாளுக்கும், தீயணைப்போர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 120 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
- பல ஆவணப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் லீனா மணிமேகலை.
- இவர் இயக்கத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து செங்கடல், மாடத்தி போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அண்மையில் இவர் இயக்கிய 'காளி' என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

லீனா மணிமேகலை
இந்நிலையில், லீனா மணிமேகலை அடுத்து 'தன்யா' என்ற படத்தை இயக்கவுள்ளார். மலையாள நடிகை பார்வதி நடிக்கும் இப்படத்தை அபூர்வ பக்ஷி, மோனிஷா தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படம் சைபர் கிரைம் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.


