search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmajan"

    • புது மணப்பெண் போல் வந்த தாயை மகள்களே அழைத்து வந்தனர்.
    • எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன்.

    மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி. இவருக்கும், கொச்சியை சேர்ந்த அனுஜா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. அவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி அனுஜாவை கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதா, வைகா என 2 மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் தர்மஜன் போல்காட்டி மனைவி அனுஜாவுடன் கொச்சி அருகே கொங்கேர்பள்ளி மகாதேவர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் காமெடி நடிகர்-அனுஜா முறைப்படி திருமணம் செய்தனர். 

    நிகழ்ச்சியில் மகள்கள் வைகா, வேதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புது மணப்பெண் போல் வந்த தாயை மகள்களே அழைத்து வந்தனர்.

    இதையடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கொங்கையர் பள்ளி பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். அதற்கு சாட்சியாக சினிமா தயாரிப்பாளரான என்.எம்.பாதுஷாவின் மனைவி மஞ்சு, நண்பர்களான கொங்கேர்பள்ளியை சேர்ந்த பிஜு, ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இதுகுறித்து தர்மஜன் போல்காட்டி கூறும்போது, 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. அதனை முறைப்படுத்துவதற்காக குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் திருமணம் செய்து உள்ளேன். எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன். இதை காண்பதற்கு எனது தந்தை, தாய் மற்றும் அனுஜாவின் தந்தை இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×