என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dharna struggle"
- கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
- போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் பெண் தனது இரண்டு மகன்களுடன் திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இரண்டு மகன்கள் கையில் வைத்திருந்த அட்டையில் போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை எனக்கு நீதியும் இல்லை என எழுதி இருந்தனர் மேலும் அந்தப் பெண் துண்டைத் தரையில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி பண்டரக்கோட்டை சேர்ந்தவர் வசந்தி. எனது கணவர் பாரதிராஜா. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்து இருந்தார்.
தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் புகார் குறித்து விசாரணை நடத்த வில்லை. ஆகையால் போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மகன்களுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடந்தது.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பணியின் போது ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளில் உள்ள ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கையினை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
சென்னையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பி.பால கிருஷ்ணன் தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
தர்ணா போராட்டம் குறித்து டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களும், தமிழக அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கும் இடையே ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை ஊதிய முரண்பாடு இருக்கிறது.
இதனால் ஆண்டுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது. 7-வது ஊதிய குழுவில் இதனை சரி செய்து அறிவிக்க வேண்டும். 2008-ம் ஆண்டு முதல் ஊதிய முரண்பாடு குறித்து போராடி வருகிறோம். ஆனால் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #tamilnews
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளைச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் இருளையா, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து அனைத்து பகுதி மக்களுக்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
மோட்டார் இன்றி இயங்காமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் பொருத்தி இயக்க வேண்டும். பழுதடைந்த சிறு மின் விசை பம்புகளை சரி செய்ய வேண்டும்.
சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட குழு செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு குணசேகரன், ஒன்றிய குழு செயலாளர் கலைச் செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், தண்டபாணி, பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்