search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dickwella"

    மேத்யூஸ், டிக்வெல்லா, குசால் மெண்டிஸ் ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குசால் பெரேரா 8 ரன்னில் வெளியேறினார்.



    ஆனால் தொடக்க வீரர் டிக்வெல்லா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். குசால் மெண்டிஸ் 38 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் மேத்யூஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி வரை நின்று மேத்யூஸ் 97 பந்தில் 97 ரன்கள் அடிக்க இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. பின்னர் 300 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்க இருக்கிறது.
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #ENGvIND
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 9 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 12 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் டிக்வெல்லா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த டிக்வெல்லா 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் மீண்டும் இலங்கை விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ஷெஹன் ஜெயசூர்யா 18 ரன்னிலும், திசாரா பேரேரா 19 ரன்னிலும், அகிலா தனஞ்ஜெயா 9 ரன்னிலும், சுரங்கா லக்மல் 7 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி 79 ரன்கள் சேர்க்க இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலுக்வாயோ தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    ×