என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dies suddenly"
- பழனிசாமி தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
- சிறுவலூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொரவம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (54). நாட்டு ச்சர்க்கரை தயாரிக்கும் கரும்பு ஆலை நடத்தி வந்தார். சம்பவத்தன்று பழனிசாமி மொபட்டில் தோட்டத்திற்கு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் காலை பெரியகொரவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் அருகே பழனிசாமியின் மொபட் நின்றது.
அப்போது பழனிசாமி, செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பழனிசாமியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பழனிசாமியின் மகன் மவுலிஸ்வரன் சிறுவலூா் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
- பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ் மகன் சங்கர் (வயது 41). லாரி டிரைவர் ஆவார்.
இவர் நேற்று லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு பவானி அருகே ஜீவா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஏஜென்சியில் லோடு இறக்க வந்துள்ளார்.
இந்நிலையில் டிரைவர் சங்கர் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.
- சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த வர் அன்சர் (வயது 31). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராசிதா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
மேலும் அன்சருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகி ச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.
இதையடுத்து அவரது நண்பர்கள் அன்சரை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மீண்டும் சத்திய மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அன்சரே சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்சர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து மனைவி ராசிதா சத்திய மங்கலம் காவல் நிலை யத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ராணுவ வீரர்-காவலாளி திடீரென இறந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் கோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலப்பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊருக்கு வந்தவர் செவல்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் இருந்து இறங்கியபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உறவிர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் மணக்கன். அரசு பணியாளர் நற்பணி சங்க கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மாடியில் இருந்து தவறி விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மணக்கன் மகள் மரகதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவபாலசுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவபாலசுப்பிரமணியம் (67).
இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வண்ணாங்காட்டு வலசு பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் காவலாளியாக பணியாற்றி அருகில் உள்ள மூலக்கரை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிவபால சுப்பிர மணியம் தனக்கு உடல் நிலை சரியில்லை என மில்லில் வேலை பார்க்கும் மேற்பார்வையாளர் பாஸ்கரனிடம் கூறியுள்ளார்.
பின்னர் பணி முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றவர் மறு நாள் வேலைக்கு செல்லவில்லை. மேற்பார்வையாளர் பாஸ்கரன் போன் செய்து பார்த்தும் சிவபாலசுப்பிரமணியம் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து மில்லில் வேலை பார்க்கும் 2 பேரை அனுப்பி சிவபால சுப்பிர மணியம் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வருமாறு பாஸ்கரன் அனுப்பி வைத்துள்ளார்.
அவர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது சிவபால சுப்பிரமணியம் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்து ள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிவபால சுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மில் மேற்பார்வையாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கோவை,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வேப்பங்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது70). இவர் போக்சோ வழக்கில் திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பழனிசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள குட்டைக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேம்புசாமி (61). இவர் கடந்த 30 வருடங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணாரி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு திருவண்ணா –மலை சென்று கொண்டி ருந்தார். அவருடன் கிளீனர் குமார், கணக்காளர் செல்வ–ரத்தினம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவருடன் வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து வேம்புசாமியின் மனைவி கண்ணம்மாள் (57) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடை விற்பனையாளர் திடீரென இறந்தார்.
- கழிவறையில் மயங்கி கிடந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 42). இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையின் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து, அந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற செல்வகுமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சக ஊழியர்கள் கழிவறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு செல்வகுமார் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் திடீரென உயிரிழந்தார்.
- மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம், வடக்கு தெரு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது 2-வது மகள் ரேணுகா(வயது 20). பிளஸ்-2 வரை படித்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று வாயில் நுரை தள்ளியவாறு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் ரேணுகாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேணுகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்."
- சம்பவத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
- மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
சென்னை திரு.வி.க.நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவருடைய மனைவி மிஸ்சியா மரினா ஜெனோவா (வயது 31). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கர்ப்பிணியாக இருந்த மிஸ்சியா மரினா ஜெனோவா ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
கடந்த மாதம் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மிஸ்சியா மரினா ஜெனோவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேட்டுக்கடையில் உள்ள ஒரு கடையில் கறி வெட்டும் தொழிலாளி தூங்கும் போது எந்த அசைவும் இல்லாமல் இருந்தார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் மேட்டுக்கடையில் உள்ள ஒரு கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணன் வேலை முடிந்து கடையில் தூங்கினார். கடை உமையாளர் கதவை தட்டினார்.
ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது சரவணன் எந்த அசைவும் இல்லாமல் இருந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்