search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diesel vehicles"

    • பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
    • பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்

    பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.

    மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

    எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.

    பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    ஜெர்மனியில் மாசு கட்டுப்பாட்டை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    பிராங்பர்ட்:

    ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது.

    எனவே அதை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் இங்கு டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 31-ந் தேதிக்கு பிறகு யூரோ- 6 புகை தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்களை இயக்க முடியாது.

    இதனால் 90 சதவீத டீசல் வாகனங்கள் ஹாம்பர்க் நகருக்குள் இயங்க முடியாத நிலை உள்ளது. எனினும், உள்ளூர்வாசிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    ×