என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dilip ghosh
நீங்கள் தேடியது "dilip ghosh"
மேற்கு வங்காளத்தில் இன்று போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசாரின் காக்கிச் சீருடையை பறிப்போம் என அக்கட்சியின் மாநில தலைவர் மிரட்டியுள்ளார். #WestBengalpolice #policewillbestripped #DilipGhosh
கொல்கத்தா:
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அரசியல் மோதல்கள் அதிகரித்து வருகிறது.
கம்யூனிஸ்டு தொண்டர்கள், மம்தா கட்சியினர் இடையிலான இந்த மோதலில் பா.ஜனதாவும் தற்போது இணைந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முன்னோட்டமாக பா.ஜனதா தலைவர் அமித் ஷா பங்கேற்கவிருந்த மூன்று பேரணிக்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனை பா.ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள பிர்பும் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ், மேற்கு வங்காளத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய சீருடையை கழற்றுவோம் என போலீசாரை மிரட்டினார்.
என்னுடைய கட்சி தொண்டர்களுக்கு எதிராக போலீசார் தவறான வழக்குகளை பதிவு செய்கின்றனர். இவர்கள் காக்கிச் சீருடையை அணிவதற்கு தகுதியற்றவர்கள். உங்களுடைய காக்கிச் சீருடையை நாங்கள் கழற்றும் நாள் கண்டிப்பாக வரும்.
எங்கள் கட்சியினர் மீது போலி வழக்குகளை போட்டு நீங்கள் எங்களை அவமதிப்பு செய்கிறீர்கள். எங்களுக்கு எதிராக தவறான வழக்குகளை பதிவுசெய்த அதிகாரிகளை நாங்கள் அடையாளம் கண்டு வைத்திருக்கிறோம்.
நாங்கள் இங்கு ஆட்சி அமைத்ததும் இதற்கான பலனை அந்த போலீஸ் அதிகாரிகள் நிச்சயமாக அனுபவிப்பார்கள் என போலீசாரை மிரட்டும் பாணியில் திலிப் கோஷ் பேசிய சம்பவத்தால் அங்கு அரசியல் மோதல் சூடு பிடித்துள்ளது.
இதற்கிடையில், இம்மாநிலத்தின் 24-வது வடக்கு பர்ஹானா மாவட்டத்தில் உள்ள பசிர்ஹட் நகரில் இன்று பிற்பகல் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசாரை தாக்கிய சிலர் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengalpolice #policewillbestripped #DilipGhosh
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X