என் மலர்
நீங்கள் தேடியது "Dinesh"
- கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார்
- இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.
கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று காரைக்குடியில் தொடங்கியுள்ளது. படத்தை குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’.
- இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லோக்கல் சரக்கு'. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் இயகியுள்ளார். மேலும், இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.

லோக்கல் சரக்கு
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் 'லோக்கல் சரக்கு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குடியால் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை விளக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வரும் திரைப்படம் தண்டகாரண்யம்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.

தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரித்துள்ளார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Nanbar #Dinesh @KalaiActor macha in #Thandakaaranyam directed by @AthiraiAthiyan thozhar produced by @beemji sir #Schedulewrap @Riythvika @actorshabeer @officialneelam
— Bala saravanan actor (@Bala_actor) April 26, 2023
மாபெரும் மகிழ்ச்சி ????????????❤️❤️❤️ pic.twitter.com/6tkGtdisZ1
- தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி.
- இவர் தமிழில் பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார்.
தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் இவர் கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தான் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக தினேஷ் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக கூறியுள்ளார். மேலும், தனது செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரக்ஷிதா வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'.
- இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்கிறார்.

லப்பர் பந்து போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.
Welcome to the world of #LubberPandhu ❤️?
— Harish Kalyan (@iamharishkalyan) October 22, 2023
ஆட்டத்துக்கு நாங்க ரெடி ? @lakku76 @Prince_Pictures @venkatavmedia @tamizh018 #AttakathiDinesh @isanjkayy @rseanroldan @DKP_DOP #HappyAyudhaPoojai pic.twitter.com/dYy3lWl0Qo
- நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய படம் J.பேபி.
- இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தின் 2-வது சிங்கிள் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.
இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். இது சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படமாகும். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் 2-வது சிங்கில் நாளை (16-ம் தேதி) வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளது. வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
- அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும்.
- சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசை.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.
இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று அறிவித்தது.
ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியான நிலையில், இன்று 2-வது சிங்கிளான "லிட்டில் பிட் கிரேசி" பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது.
- ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். ஒரு தாய் திடீரென்று தன் குடும்பத்தை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியே செல்கிறார். மகன் எப்படி அவரை கண்டுபிடித்தார் என்பதே கதைக் களம்.
ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம். இப்படத்தில் ஹன்சிகா திகிலூட்டும் வேடத்தில் நடித்துள்ளார். சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு திகில் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ஷில்பா மஞ்சுனாத் அடுத்து சமூத்திரகனியுடன் சேர்ந்து சிங்கப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சதீஷ் குமார் இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது.
மேகனா இலன், சார்லி, இமான் அண்ணாச்சி நடிப்பில் நாளை வெளியாகும் படம் "அரிமாபட்டி சக்திவேல்". ரமேஷ் கந்தசாமி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. பாடகர் மற்றும் இசையமைப்பாளார் ப்ரதீப் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படமும் நாளை வெளியாக உள்ளது.
- 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
- அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
படத்தின் பாடல்கள் இரண்டு மாதங்களுக்கும் முன் வெளியாகிய நிலையில். இன்று ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
- லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மூன்றாவது பாடலான டம்மா கோலி என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
- இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மூன்றாவது பாடலான டம்மா கோலி என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. பாடல் ஒரு கானா பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிமுக இயக்குநர் மகிழன் தன் முதல் முயற்சியாக, தன் நண்பர்களுடன் இணைந்து இந்த குறும்படத்தினை உருவாக்கியுள்ளார்.
- இக்குறும்படத்தினை, லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்டார்.
LV production & கார்த்திக் துரை வழங்க, அறிமுக இயக்குநர் மகிழன் இயக்கத்தில், பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு தான் உண்டு என்பதைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள "பிளைன் பேப்பர்" குறும்படத்தினை, லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் மகிழன் தன் முதல் முயற்சியாக, தன் நண்பர்களுடன் இணைந்து இந்த குறும்படத்தினை உருவாக்கியுள்ளார். திரைப்படத்திற்கு இணையாக படைப்பாக, மிகச்சிறந்த தொழில் நுட்பத் தரத்துடம் இக்குறும்படம் உருவாகியுள்ளது.
ஆணும் பெண்ணும் சமம் என்பது, இன்றும் ஏட்டளவில் தான் இருக்கிறது. எவரையும் பார்த்தவுடன் அவர்களைப் பற்றி முன்முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட வாழ்க்கை இருக்கிறது. அவர்களுக்கென தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. எனும் கருத்தை மையமாக வைத்து இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.


ஒரு பெண் திருமண உறவில் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் இருக்கும் பெண் குடியில் உழல்கிறாள் அவளது வாழ்வில் வரும், இளைஞனால் அவளது வாழ்க்கை மாறுவது தான் இந்த குறும்படத்தின் கதை.
மாறுபட்ட கதைக்களத்தில் பெண் சுதந்திரத்தின் அவசியத்தை பேசும் அழகான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, முன்னணி பிரபல நடிகர் தினேஷ் மற்றும் இயக்குநர் லெனின் பாரதி பாராட்டியுள்ளனர்.
மகாலட்சுமி மற்றும் விஜய் இக்குறும்படத்தில் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசையமைத்துள்ளார். சரத் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த குறும்படம் YouTube தளத்தில் Lightz On சேனலில் இந்த லிங்கை கிளிக் செய்து காணலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.