search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dipak mishra"

    அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. #Aadhaar #DipakMishra
    புதுடெல்லி:

    வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. இதனை எதிர்த்து 27 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

    அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. மேலும், நீதிமன்ற வழக்குகளை நேரலையாக காண வழிவகை செய்ய வேண்டும் என்ற பொதுநல வழக்கு மீதும் நாளை தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது. 
    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #RanjanGogoi #CJI
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது. 

    அதன்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார்.

    இந்நிலையில், ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 3- தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொள்ள உள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
    ×