search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Direct flights"

    • 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து சேவை தொடங்குகிறது.
    • விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் , 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும்.

    அதேபோல, சென்னை-மொரீஷியஸ் இடையே 'ஏர் மொரீஷியஸ்' ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவக்கி வைக்கப்படும் என 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் உச்சியாமா பேசியதாவது:-

    சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவுக்கு நேரடியாக வாரத்துக்கு 7 நாட்களும் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும். இந்த சேவை வரும் அக்டோபரில் தொடங்கப்படும்.

    ஜப்பானின் “நிப்பான் ஏர்வேஸ்” நிறுவனத்தின் சேவை, வாரத்தின் ஏழு நாட்களிலும் இருக்கும். இந்த சேவை மூலமாக ஜப்பான் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மற்ற நாடுகளில் இருந்து நரிட்டா வழியாக சென்னை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த விமான சேவையின் மூலம் தமிழக கலாசாரத்தை பார்க்க ஜப்பானில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் பட்சத்தில் இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், டி.வி.எஸ். நிறுவனத்தின் வேணு சீனிவாசன் பேசும்போது, ‘மேக் இன் இந்தியா என்ற கொள்கையை மத்திய அரசு கூறியுள்ளது. அதுபோல மேக் இன் தமிழ்நாடு என்ற நிலையை இந்த மாநாடு உருவாக்கும். தொழில் முன்னேற்றத்துக்கு உகந்த மாநிலம் தமிழகம் என்பதற்கு எங்கள் நிறுவனமே சான்று. 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் தற்போது பெரிய அளவில் விரிந்திருப்பதே இதற்குச் சான்று’ என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் கரண் அதானி பேசும்போது, ‘ஏற்கனவே தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலமாக விளங்குகிறது. சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணியில் அதானி குழுமம் ஈடுபட உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் அதானி குழுமம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும்’ என்று குறிப்பிட்டார்.
    ×