என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director Atlee"

    • இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
    • இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

    தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர், ஹீரோ ஆகிய இருவருக்கும் இது முதல் படம்.
    • படம் காமெடி கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுமுக இயக்குநர் அருண் இயக்கத்தில் பிரபல யூடியூபர்"ஜம்ப்கட்ஸ்" ஹரி பாஸ்கர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். அதன்படி, ஜூலை 12ம் நாள் தேதி போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

    அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இயக்குநர், ஹீரோ ஆகிய இருவருக்கும் இது முதல் படம். இருப்பினும், Mr.House keeping படம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

    இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இதற்குமுன்னர் சில படங்களில் துணை இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் (சந்திரமுகி 2) பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தற்போது முதன்முறையாக ஒரு படத்தை தனித்து இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ள நிலையில், படம் காமெடி கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினி சென்றுள்ளார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.

    இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்து உரையாடியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார்.


    ஷாருக்கான்

    மேலும் அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த அனுபவப் பதிவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் அட்லீ தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
    • இவருக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் நேரில் வாழ்த்து கூறியுள்ளனர்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


    அட்லீ

    இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் அட்லீ நேற்று (21-09-2022) தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


    விஜய் - அட்லீ- ஷாருக்கான்

    இந்நிலையில், இவருக்கு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளனர். இதனை அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என் பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும். என் தூண்களுடன் மிக சிறந்த பிறந்தநாள். மைடியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன் என் தளபதி விஜய்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜவான்.
    • ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.


    ஜவான்

    இந்நிலையில், ஜவான் திரைப்படத்தில் 200 முதல் 250 பெண்கள் வரை பங்குபெறும் சண்டைக்காட்சி உருவாக இருப்பதாகவும் இதற்காக மும்பையில் இருந்து அவர்கள் சென்னை வர இருப்பதாகவும் ஏழு நாட்கள் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான்.
    • இந்த படம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

     

    ஷாருக்கான்

    ஷாருக்கான்

    ஜவான் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

     

    தீபிகா படுகோனே - ஷாருக்கான்

    தீபிகா படுகோனே - ஷாருக்கான்

    இந்நிலையில் 'ஜவான்' படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ஜவான்' படக்குழு இப்படத்தில் நடிக்க வைக்க தீபிகா படுகோனேவை அணுகியபோது ஷாருக்கான் படம் என்றவுடனே உடனடியாக 'ஓகே' சொல்லியிருக்கிறாராம்.

    ஷாருக்கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்' படம் மூலமாக தீபிகா படுகோனே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.
    • இவர் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    அதன்படி, நயன்தாராவின் 75-வது படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. மேலும், இப்படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

    முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

    அண்மையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜவான்

    இந்நிலையில், ஷாருக்கான் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான். இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளமே இல்லாமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த காட்சிகள் ஒரேநாளில் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான்.
    • இந்த படம் அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    ஜவான்

    இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


    விஜய் சேதுபதி - ஷாருக்கான்

    சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பலரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி வருகின்றனர். அதன்படி, ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜவான்.
    • ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    ஷாருக்கான்

    இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், ஜவான் திரைப்படத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று பெரும் தொகை கொடுத்து வாங்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடி-க்கு கொடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இதனை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ. 120 கோடி கொடுத்து வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.
    • இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


    ஷாருக்கான் - அட்லி

    அதில், அட்லி இயக்கும் ஜவான் படம் குறித்து அவர் பேசுகையில், " அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நடிகனாக ஜவான் போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படம் டார்க் மேன் படத்தை ஒத்திருப்பதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பல வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானார். தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ஜவான் திரைப்படக்காட்சி

    இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள 'ஜவான்' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இதில், ஷாருக்கான் தன் முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு தோன்றுவார். இதனிடையே, இப்படத்தின் டீசர் ஷாம்ரேமி இயக்கத்தில் 1990-ஆம் ஆண்டு வெளியான 'டார்க்மேன்’ படத்தை ஒத்திருப்பதாக நெட்டீசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

    ×