search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director H. Vinod"

    • சிவகார்த்திகேயன் படத்திலும் ஜான்விகபூர் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.
    • சமீபகாலமாக ஜான்விகபூர் அடிக்கடி சென்னை வந்து செல்கிறார்.

    விஜய் நடித்து வரும் தி கோட் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தனது 69-வது படத்தை எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்விகபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சமீபகாலமாக ஜான்விகபூர் அடிக்கடி சென்னை வந்து செல்கிறார். தனது தாயார் ஸ்ரீதேவி பிரபலமாக திகழ்ந்த தமிழ் திரை உலகில் அறிமுகமாக வேண்டும் என்பது ஜான்வி கபூரின் தீராத ஆசையாக இருந்து வருகிறது.

    அவரது ஆசையை தந்தை போனிகபூர் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார். விஜய்யின் 69 படத்தை இயக்க இருக்கும் எச்.வினோத், போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய 3 படங்களை இயக்கியவர்.

    எனவே முதல் முதலாக ஜான்விகபூர் அவரது இயக்கத்தில் அறிமுகமாவது சரியாக இருக்கும். அதுவும் விஜய்க்கு ஜோடியாக இணைந்தால் இரட்டை மகிழ்ச்சியாக அமையும் என போனிகபூர் விரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திலும் ஜான்விகபூர் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    ஜான்விகபூர் கடந்த முறை சென்னை வந்த போது தாயார் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த கோவிலான தியாகராய நகரில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் அவருக்கு சொந்தமான பங்களாவை சுற்றுலா விடுதியாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×