search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK"

    எசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்து முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் முத்திரை படைத்தனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஷிகர் தவான் ரன்ஏதும் எடுக்காமலும், புஜாரா 1 ரன்னிலும், ரகானே 17 ரன்னிலும் வெளியேறினார்கள். 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தாலும் முரளி விஜய் 53 ரன்களும், விராட் கோலி 68 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தனர்.

    அடுத்து வந்த லோகேஷ் ராகுலும் 58 ரன்கள் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 82 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, முரளி விஜய், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்துள்ளனர். இதனால் ஆடும் லெவன் அணியில் யாரெல்லாம் இடம்பிடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக தொடக்க வீரர்களான களம் இறங்க இரண்டு பேருக்கே வாய்ப்பு என்பதால் முரளி விஜய், தவான், லோகேஷ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும். #MuraliVijay #KLRahul #Dhawan
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND @RishabPant777
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்  ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் டெஸ்டின்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடையாத  முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    சகா காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

    18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. முரளி விஜய், 7. கருண் நாயர், 8. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ. 13. ஹர்திக் பாண்டியா. 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா, 18. சர்துல் தாகூர்.
    இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #ENGvIND #DK #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. மோர்கன் டாஸ் சுண்ட விராட் கோலி ஹெட் என அழைத்தார். ஆனால் டெய்ல் விழ, மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.



    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளால் இன்றைய போடடியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    ×