search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dominic thiem"

    • கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.
    • உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

    வியன்னா ஓபன் 2024 தொடரின் முதல் போட்டியில் இத்தாலியை சேர்ந்த லூசியானோ டார்டெரியை டொமினிக் தீம் எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் டார்டெரி 7-6 (6), 6-2 என்ற கணக்கில் டொமினிக்-ஐ வீழ்த்தினார். 91 நிமிடங்கள் நீடித்த போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டொமினிக் தீம் அறிவித்தார்.

    முன்னாள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்த டொமினிக் தீம் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்று அசத்தினார். அதன்பிறகு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனோடு ஓய்வு பெறும் கட்டாயத்திற்கு டொமினிக் தள்ளப்பட்டார். அந்த வகையில், அவர் விளையாடிய கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.

    ஓய்வு பெற்ற டொமினிக் தீம்-க்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த போட்டி வியன்னாவில் உள்ள ஸ்டட்ஹாலே அரீனாவில் நடைபெற்றது. போட்டிக்கு பிறகு பேசிய டொமினிக் தீம், "கடந்த சில மாதங்களில் பல அருமையான குட்-பைக்களை கடந்து வந்துள்ளேன், ஆனால் இன்று உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.

    ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
    ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரி் ஓபன் டென்னிஸ் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.



    இதில் ஜோகோவிச் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜோகோவிச் அரையிறுதியில் டொமினிக் தியெம்-ஐ கடும் போராட்டத்திற்குப்பின் ( 7(7)-6(2), 7(7)-6(4)) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டோமினக் தீயமை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். #ATPFinal #RogerFederer #DominicThiem
    லண்டன்:

    ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டோமினக் தீயமை (ஆஸ்திரியா) தோற்கடித்தார். பெடரர் தொடக்க ஆட்டத்தில் நிஷிகோரியிடம் (ஜப்பான்) தோற்று இருந்தார். தற்போது அவர் முதல் வெற்றியை பெற்றார்.

    பெடரர் கடைசி ஆட்டத் தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஆண்டர்சனை சந்திக்கிறார். ஆண்டர்சன் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தார். #ATPFinal #RogerFederer #DominicThiem
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்திய டொமினிக் தீம் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #DominicThiem
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே டொமினிக் தீம் அபாரமாக விளையாடினார். இதனால் 7- 5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

    தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டிலும் டொமினிக் தீம் சிறப்பாக விளையாடினார். இதனால் இரண்டாவது செட்டை 6 -2 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 7-6(2) என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், டொமினிக் தீம் 7-5 6-2 7-6(2) என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி போட்டியில் டொமினிக் தீம் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் அல்லது நிகோலஸ் பாசிலாஸ்விலியுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #DominicThiem
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் டொமினிக் திம், மேடிசன் கீஸ் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen2018 #DominicThiem
    பாரீஸ்:

    பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர்.

    ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார். ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

    பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிலிச் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.  #FrenchOpen2018 #DominicThiem  #tamilnews 
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் டொமினிக் தீயம் 6-3, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பெர்டினியை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #FrenchOpen
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 7-ம் நிலை வீரரான டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 3-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பெர்டினியை எதிர்கொண்டார்.

    இதில் தீயம் 6-3, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் இந்த அளவில் நிஹி கோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் உலகின் இரண்டாம் நிலை வீரரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 10-ம் நிலை வீரரான பஸ்டா 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), மேடிசன் (அமெரிக்கா) வெற்றி பெற்றனர்.



    4-ம் நிலை வீராங்கனை சுவிட்டோலினா (உக்ரைன்) 3-வது ரவுண்டில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இன்று நடைபெறும் முக்கியமான 3-வது சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் ராபல் நடால் (ஸ்பெயின்)- கேஸ்குயிட் (பிரான்ஸ்), சிலிச் (குரோஷியா)- ஜான்சன் (அமெரிக்கா), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- மிஸ்சா சுவரேவ் (ஜெர்மனி), ஜான் இஸ்னெர் (அமெரிக்கா)- ஹெர்பர்ட் (பிரான்ஸ்) மோதினார்கள்.

    பெண்கள் பிரிவில் ஹிமோனா ஹெல்ப்ட் (ருமேனியா)- பெட்கோவிக் (ஜெர்மனி), பிறிஸ்கோவா (செக்குடியரசு)- ‌ஷரபோவா (ரஷியா), கார்சியா (பிரான்ஸ்), இரினா பெகு (ருமேனியா) செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஜூலியா கோயர் ஜெஸ் (ஜெர்மனி) கெர்பர் (ஜெர்மனி)- பெர்டன்ஸ் (நெதர்லாந்து) மோதுகிறார்கள். #FrenchOpen
    ×