என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dosha Pariharam"

    • முருகனும் ஹத்திதோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார்.
    • கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும்.

    கந்தசஷ்டியின் போது முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்த பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    முருகனும் ஹத்திதோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார். இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்று அங்கு ஓடுகிறது.

    முருகன் இந்தத்தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் வெளி வந்தது. அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்தத்தில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார். அப்போது சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தன. உடனே முருகன் தன் அன்னை உலகமாதாவை வணங்கினார்.

    பின் வேண்டிக் கொண்டார். தாயே உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என்மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது. தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றார். உடனே பார்வதி தேவி இத்தலத்தின் எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள். இதனால் அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப் பெயர். இதனால் பிரம்மஹத்திகள் ஓடிப்போயின. முருகனும் தவத்தை முடித்து தோஷம் நீங்கி அருள் பெற்றார். இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.

    • பஞ்ச பைரவ வழிபாடு என்பது, ‘பிதுர்தோஷ நிவர்த்தி’க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும்.
    • இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள். வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற வானுலக பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலமாகும். எனவே தான் இத் தலம் 'ஆவூர்' என்றானது. ('ஆ' என்பது 'பசு'வை குறிக்கும்).

    இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 'பஞ்ச பைரவ மூர்த்திகள்.' இந்த ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும். பஞ்ச பைரவ வழிபாடு என்பது, 'பிதுர்தோஷ நிவர்த்தி'க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

    ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையோ, வாய்ப்புகளோ அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பலபேர் அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர், ஆனால் வாழ்வில் அமைதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு, பிதுர் தோஷம்தான் காரணம். அவர்கள் அனைவரும், இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.

    • மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும்.
    • தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

    திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவது ஒருவரின் பிறப்பு ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? என உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.

    சில வகையான தோஷங்கள், சில கிரக சேர்க்கைகள், சில தசா, புத்திகள், கோட்ச்சார நிலை போன்ற பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

    இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். 8-ம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுஸ் ஸ்தானம் அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இது திருமணத் தடையை மிகைப்படுத்தும் தோஷ அமைப்பாகும்.

    8-ம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

    வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும்.

    • இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது.
    • இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது.

    முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலோ அல்லது கொன்றிருந்தாலோ கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. முன்ஜென்மத்தில் மட்டுமல்ல தற்போது உள்ள ஜென்மத்திலும் பாம்பை தொந்தரவு செய்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது. மேலும் 2 பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் போது அதனை கொல்வது தொந்தரவு செய்வது போன்றவற்றால் மிகுந்த கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.

    இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது. லக்கினத்தில் ராகு இருந்தால் அதிலிருந்து 7 வைத்து இடத்தில் தான் கேது அமர்வார். ராசிக்கட்டத்தில் 7-வது இடமானது திருமணத்தை குறிக்கும். இதனால் தான் திருமண தடை ஏற்படுகிறது.

    லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம்.இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரை வாழ்க்கை போராட்ட களமாக இருக்கும்.

    திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும். காலதாமதமாக திருமணம் செய்வதே நல்ல தீர்வு. தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது.

    பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு.

    கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட சில வழிபாடுகள் உள்ளன. சிவ வழிபாட்டின் மூலம் காலசர்ப்ப தோஷத்தை நீக்கலாம். திங்களன்று சிவா பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நன்மை கிட்டும்.

    செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி மஞ்சள் மற்றும் குங்குமம் சாற்றி வழிபட்டால் தோஷம் விலகும். மீனாட்சி அம்மனை தினமும் தரிசித்து வந்தால் நன்மை கிட்டும்.

    • பிற தோஷங்களை ஒப்பிடுகையில் சுக்கிர தோஷம் கெடுதல்களை அளிப்பதில்லை.
    • இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது.

    ஒருவரின் வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெற்று வாழ வேண்டுமெனில் அவரின் ஜாதகத்தில் சுக்ரனின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவரின் திருமண வாழ்க்கை, சுக போகங்கள், மகிழ்ச்சி ஆகியவை கிட்டும். எனவே தான் ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரனின் நிலை மிக முக்கியமாகும். இப்பொழுது சுக்கிர தோஷம் ஏற்பட்டால் அதற்கு என்ன பரிகாரங்கள் மேற்கொள்ளலாம் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

    ஒருவரின் சாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தாலோ, கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் இணைந்து இருந்தாலோ, லக்கனத்திற்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ, அல்லது சுக்கிரனக்குரிய இடமாக இல்லாமல் இருந்து அது 7-ம் வீட்டில் இருந்தாலோ, அல்லது லக்கனத்திற்கு 3-ம் வீட்டில் மறைந்து இருந்தாலோ, 12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ அது சுக்கிர தோஷம் ஆகும்.

    இந்தத் தோஷம் திருமணத்தடை மற்றும் திருமணத்திற்கு தாமதம் ஏற்பட காரணமாக இருக்கிறது.

    அதாவது சாதகத்தில் சுக்கிர பகவான் ஏதாவது ஒரு கெடுதல் செய்யும் கோளுடன் இணைந்து இருத்தலே, இந்தத் தோஷத்திற்குக் காரணமாக உள்ளது.

    சரியான தசா புத்தி வரும்வரை காத்திருப்பது நல்ல பரிகாரம் ஆகும். இல்லையென்றால் தேவையற்றப் பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.

    பிற தோஷங்களை ஒப்பிடுகையில் சுக்கிர தோஷம் கெடுதல்களை அளிப்பதில்லை. எனினும், திருமண உறவில் விரிசல் அல்லது பிரிவுக்கு சில நேரங்களில் அது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

    இதற்கு பரிகாரம் தனித்து இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம், சுக்கிர தோஷத்தின் கெடுதல்களைக் குறைக்க இயலும்.

    களத்திரகாரகரான சுக்ரன் 7-ல் அமர்வது காரகோ பாவக நாஸ்த்தி. சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறது. இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது.

    பரிகாரம்

    சுக்கிர பகவானுக்கு வெண்ணிற ஆடைகள் சாற்றி, தாமரை பூவால் அர்ச்சனை செய்து வர வேண்டும். மொச்சைப் பயிரை பிரசாதமாக செய்து கோவிலுக்கு வருபவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் வீட்டில் அத்தி மரங்கள் வளர்த்து வரலாம்.

    இரவில் மொச்சை பயிரை ஊற வைத்து அந்த தண்ணீரை இந்த மரத்திற்கு ஊற்றி அந்த மொச்சை பயிரை பசுவிற்கு கொடுத்து வர வேண்டும். மேலும் வீட்டில் மஹாலக்ஷ்மி உருவ படத்தை வைத்து வெள்ளிக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இவ்வாறு செய்து வந்தால் சுக்கிர தோஷம் குணமடையும்.

    வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    • விஷ கன்னிகா தோஷம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    • ஒரே ஆறுதல்...ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும்.

    விஷ கன்னிகா தோஷம் குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் , திதி மூன்றும் சேர்ந்து வரும் நாளில் பிறந்து 2, 4, 5, 7,8,12 பாவங்களும், பாவாதிகளும் பாதிப்படையும் நிலையில் மிக மோஷமான பாதிப்பை தருகிறது,

    நாள் - ஞாயிறு, செவ்வாய் , சனி;

    திதி- துவிதியை, சப்தமி, துவாதசி;

    நட்சத்திரம் - ஆயில்யம், கார்த்திகை, சதயம்,

    ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7,8 ஆகிய பாவகங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும் , சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. விஷ கன்னிகா தோஷம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த தோஷம் என்பது மிக அரிதினும் அரிதாக உண்டாகக்கூடிய கிரக அமைப்பாகும்.

    விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறையல்ல மூன்று நான்கு முறை கூட தொடரும். இறுதியாக வாழ்க்கைத் துணை இல்லாமல் தனியாகத்தான் வாழ வேண்டியது வரும். திருமணத்தையும் தந்து அதில் பலவித பிரச்சினைகளையும் உண்டு பண்ணி, அடுத்தடுத்து திருமணங்களிலும் மன ஒற்றுமை ஏற்படவிடாமல் தடுத்து, மண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது விஷ கன்னிகா தோஷம். ஒரே ஆறுதல்...ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும். அது மட்டுமே ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும்.

    இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-வது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும் போதோ தோஷத்தின் வீரியம் குறையும். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும் எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி கோட்ச்சார கிரகங்கள் தொடர் பெறும் காலங்களில் மட்டுமே சுப-அசுப விளைவுகள் ஏற்படும். ராகு-கேது, செவ்வாய் மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூட நம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.

    • சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவரவில்லை.
    • தோஷத்தினால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.

    ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த தோஷம் "செவ்வாய் தோஷம்'' ஜாதக கட்டத்தில் லக்னம், ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். இதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவரவில்லை. சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் கிரகம் என்பதால் தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை.

    பாவக ரீதியாக செவ்வாய் நின்ற இடத்திற்கு ஏற்ப தோஷத்தினால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதி விலக்குகளால் சிலருக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும் கூட 2,7,8-ம்மிடத்தில் உள்ள செவ்வாய்க்கு 2,7,8-ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தையும் 4,12-ம் இடத்தில் உள்ள செவ்வாய்க்கு 4,12ல் செவ்வாய் உள்ள தோஷத்தையும் சேர்க்க வேண்டும்.

    லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.

    செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷம் இல்லை.

    செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை.

    அதேபோல் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.

    செவ்வாய் இருக்கும் 8-வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.

    செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி.

    பொதுவாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் செவ்வாய் கிழமை ராகு வேளையில் சுப்ரமணியரை சிவப்பு அரளி சாற்றி வழிபட்டால் திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

    • தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.
    • இந்த தோஷம் ஆண் – பெண் இருவருக்கும் ஏற்படுகிறது.

    ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட தோஷம் ஆண் – பெண் இருவருக்கும் ஏற்படுகிறது. இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைபடுதல், தாமதப்படுதல் ஏற்படுகிறது.

    இந்த தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை , காலதாமத திருமணம் , களத்தரத்தின் மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். இந்த தோஷத்தை கீழ்க்கண்ட எளிய பரிகாரங்கள் மூலம் போக்கி சிறப்பான திருமண வாழ்வு அமைய பெறலாம்.

    இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மண வரை சுக்ர ஓரையில் அர்த்தநாதீஸ்வரரை வழிபட வேண்டும்.

    வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்கு செவ்வாய்கிழமையில் சென்று கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்குவதற்கான வழிபாடு, பூஜை செய்ய ஏற்பாடு செய்து வழிபட வேண்டும். முருகன் சந்நிதியில் கொடுக்கபட்ட பிரசாதமான தீருநீறு மற்றும் குங்குமத்தை பூஜை அறையில் வைத்து வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்த 90 வது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி விடும். திருமணம் சிறப்பாக நடந்து நீண்ட ஆயுளுடன் வாழ்வர். திருமணத்திற்கு பிறகு தம்பதி சகிதம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும்.

    ஒன்பது செம்பருத்தி பூக்கள், ஒரு சிவப்புநிற ஜாக்கெட் துணி, 27 கொண்டைக் கடலைகள் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். ஒரு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை பசுமாட்டு கோமியம் தெளித்து சுத்தம் செய்த பின், சிவப்பு ஜாக்கெட் துணியில் செம்பருத்திப்பூ மற்றும் 27 கொண்டைக்கடலைகளை வைத்துகட்டி, பூஜை அறையில் வைக்க வேண்டும். மஞ்சள் துணியில் தங்களது குலதெய்வத்திற்குத் தனியே காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். பகல் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதமிருந்து மாலையில் யாரும் பார்க்காதவாறு அந்த முடிச்சை எடுத்துச்சென்று தெப்பகுளம், கண்மாய், ஆற்றுபடுக்கை போன்ற நீர்நிலைகளில் போட்டு விட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் களஸ்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

    • கேரளாவில் உள்ளது மண்ணார சாலை நாகராஜா கோவில்..
    • இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும்.

    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ்பெற்ற மண்ணார சாலை நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தையில்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது.

    இதற்காக பல நாடுகளில் இருந்து சாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை வழிபாடுகளில் பங்கேற்பது இங்கு சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆயுள் குறைவு, வம்ச நாசம், தீராவியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் குறையை போக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஆரோக்கிய வாழ்வு பெற நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு ஆகியவையும் சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்களும், நீண்ட ஆயுள் பெற நெய், நினைத்த காரியம் கை கூடுவதற்கு பால், கதலிப்பழம், நிலவறை பாயாசமும், குழந்தை பாக்கியத்திற்கு மஞ்சள் பொடி, பால் பூஜை நடத்த தங்கத்திலான சிறிய உருளி வழங்குதல், மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் போன்றவை படைக்கப்பட வேண்டும். நாக தோஷ பரிகாரம், சர்ப்ப பலி, மஞ்சள் பொடி காணிக்கை, பால் பழம் நிவேத்யம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் போன்றவை படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    மண்ணாரசாலை கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வேண்டுதலுக்காக சுத்தமான தங்கத்திலும், வெள்ளியிலும் தயாரிக்கப்பட்ட நாகர் வடிவங்கள், நாகர் முட்டை, புற்று, ஆள் வடிவங்கள், விளக்குகள், மஞ்சள் பொடி, உப்பு, நல்ல மிளகு, கடுகு, கற்பூரம், பட்டுத்துணி ஆகிய அனைத்து பொருட்களும் கோவில் கவுண்ட்டர்களில் கிடைக்கும்.

    • கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது.
    • கால சர்ப்ப தோ‌ஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.

    திருமணத் தடை: கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது. ராகு/கேதுக்கள் நின்ற நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ல் ராகு- கேதுக்கள் இருந்தால் பாதகத்தை தரும். தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் உரிய வயதில் நடக்கும்.

    சிலருக்கு காதல் திருமணத்தை நடத்தி இல்வாழ்க்கையில் சங்கடத்தை மிகைப்படுத்தும் அல்லது சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். அதனால் 27 வயதிற்கு மேல் திருமணம் நடத்துவது சிறப்பு.

    பரிகாரம்: ஜனன கால ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைகளுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை செய்து வர வேண்டும். சுவாதி, சதயம், திருவாதிரை, அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரதோ‌ஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் தோ‌ஷத்தின் வீரியம் குறைந்திடும்.

    புத்திரபாக்கியம் : குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம், அடிக்கடி கருக்கலைதல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பது அல்லது ஆண் வாரிசுகள் மட்டும் இருப்பது போன்ற குறைபாடு இருக்கும். சிலருக்கு பெற்ற பிள்ளைகளால் வாழ்நாள் முழுவதும் மனவேதனை இருந்து கொண்டே இருக்கும்.

    பரிகாரம் : கிருத்திகை, விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று திருச்செந்தூர் முருகனை நினைத்து 27 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். திருவாதிரை, மகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.

    நோய் : தோ‌ஷத்தின் வீரியம் அதிகமாக இருந்தால் ராகு-கேதுவின் தசா, புத்தி அந்தர காலங்களில் அல்லது 6,8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இனம் புரியாத நோய் அல்லது தீராத நோய் அல்லது ஆயுள் பயம் அதிகமாக இருக்கும்.

    பரிகாரம் : மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும்.

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்

    உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

    அதிர்ஷ்டம் : நித்திய கண்டம் பூரண ஆயுள் என சிலருக்கு அதிர்ஷ்டக் குறைபாடு மிகுதியாக இருக்கும், பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள், நிரந்தர தொழில் மற்றும் வேலை இல்லாத நிலை, வறுமை, குடும்பத்தில் மிகுதியான கூச்சல் குழப்பம் , உழைப்பிற்கு தகுந்த ஊதியமின்மை, தொடர் விரயம், வீட்டில் தங்கம் தங்காத கஷ்டம் நிலவும்.

    பரிகாரம் : திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரரை வழிபட வேண்டும்.

    சாதாரண பாதிப்பை தரும் எந்த தோ‌ஷத்திற்கும் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கால சர்ப்ப தோ‌ஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.

    மேலேயே கூறியது போன்ற குறைபாடு இருப்பவர்கள் நம்பிக்கையுடன் குலதெய்வ வழிபாடு, கருட வழிபாடு செய்து கருட சுலோகங்களை படித்து வர பாதிப்பின் சுவடே தெரியாது.

    • திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது.
    • சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்தது சர்ப்ப தோஷம். நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது. கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியும் வரைக்கும் தினசரியும் படித்து வர தோஷங்கள் படிப்படியாக நீங்கும்

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும். ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கி நல்ல புத்திரர் பிறப்பார்கள்.

    தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம். கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும். கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும். சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

    சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும். குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

    • இந்த பரிகாரத்தை ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடவே இல்லை.
    • இந்த தோஷத்திற்கு மிக எளிமையான பரிகாரம் உள்ளது.

    இருதார தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டி விடுவார்கள்! இப்படிப்பட்ட ஒரு பரிகாரம் இந்த இருதார தோஷத்திற்கு செய்து வருகிறார்கள். இது ஏற்புடையதா? என்றால் நிச்சயமாக இல்லை.!

    எந்த ஜோதிட நூல்களிலும் இப்படிப்பட்ட பரிகாரத்தை ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடவே இல்லை. பொதுவாக இந்தப் பரிகாரத்தைச் செய்பவர்கள் வாழைமரத்தை ஏற்கெனவே வெட்டி எடுத்து வந்து, அதற்கு தாலி கட்டச் சொல்வார்கள். ஏற்கெனவே வெட்டப்பட்ட வாழைமரம் உயிர்ப்போடு இருக்காது என்பது எல்லோரும் அறிந்ததே.

    இன்னும் ஒரு சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது. இதில் வருந்தக் கூடிய விஷயம் என்னவென்றால் பெண்களுக்குக் கூட இந்த வாழைமர பரிகாரத்தை செய்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

    அப்படியானால் இந்த இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? என்று கேட்டால்..! மிக எளிமையான பரிகாரம் உள்ளது.... இரு தார தோஷம் இருப்பவர்கள் திருமணம் முடிந்தவுடன், மூன்றாவது மாதத்தில், கட்டிய தாலியை ஏதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த ஆலயத்தின் இறைவன் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டிக்கொள்வதே எளிமையான பரிகாரம்! இரு தாரம் எனும் தோஷம் இப்படித்தான் விலகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

    ×