search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug issue"

    • தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
    • போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.

    சென்னை:

    போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும்அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் சி.வி.சண்மும் பங்கேற்றார். போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து திரளானோர் பங்கேற்றனர்.

     

    போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    * போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.

    * போதைப்பொருளால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.

    * ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

    * தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது.
    • தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?

    அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஜாபர் சாதிக், 5க்கும் மேற்பட்ட செல்போன்களை மாற்றியதாக தகவல்.

    போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார்.

    ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த 17ம் தேதி முதல் தலைமறைவான ஜாபர் சாதிக், 5க்கும் மேற்பட்ட செல்போன்களை மாற்றியதாக தகவல் வௌியாகியுள்ளது.

    ஜாபர் சாதிக், 2019ம் ஆண்டு முதல் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, புரசைவாக்கத்தில் ஓட்டல், 'மங்கை' படம் தயாரித்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கடத்தலில் வந்த பணத்தின் மூலமாக பயன் அடைந்தவர்கள் பட்டியலை தனித் தனியாக விசாரணை செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    ×