என் மலர்
நீங்கள் தேடியது "Dudley"
இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சின்கம் உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும், விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்திலும் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் டூட்லி ஜெயம் ரவியின் 25-வது படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் விவசாயிகள் பிரச்சனையை பேசும் படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையைமக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.