என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "durai senthil kumar"

    • தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.
    • இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.


    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், தற்போது இவர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில், "அடுத்த படத்துக்கு எல்லாமே தயாராகிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்'என குறிப்பிட்டுள்ளார்.


    லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • சூரி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

    இயக்குனர் துரை செந்தில்குமார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருடன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    ×