search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Earpods"

    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு வேரியண்ட் தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என என்றும் இவை புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதுகுறித்து மிங் சி கியூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் போன்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் மேம்பட்ட ஏர்பாட்ஸ் மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் சார்ந்து மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் 5.2 கோடிகளை கடக்கும் என தெரிகிறது. இது 2020 ஆம் ஆண்டில் 7.5 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.



    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் பவர்பீட்ஸ் ப்ரோ எனும் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 மணி நேரத்திற்கான பேக்கப், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் செக்யூர்-ஃபிட் இயர்ஹூக்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பவர்பீட்ஸ் ப்ரோ ஐவரி, பிளாக், மாஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமெரிக்கா மற்றும் 20 நாடுகளில் விரைவில் துவங்க இருக்கிறது.
    ×