search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ecnonomic"

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தடையால் பெரும் பொருளாதாரச் சரிவை ஈரான் சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டு நிதி மந்திரியை பாராளுமன்றம் இன்று பதவி நிக்கம் செய்தது. #Iranianparliament
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

    கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

    நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

    இதேபோல், சமீபத்தில் அந்நாட்டின் மத்திய வங்கி தலைவரை நீக்கம் செய்து அதிபர் ஹசன் ரவுகானி உத்தரவிட்டதும், தொழிலாளர் நலத்துறை மந்திரியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றம் வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. #Iranianparliament #Iranfinanceremoved #MasoudKarbasian
    ×