என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ecp
நீங்கள் தேடியது "ecp"
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்களின் வாக்குகள் பதிவான இரு தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. #ECPvoidpolls #femalevoterslowturnout
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமைகள் நிலநாட்டப்பட வேண்டும் என்னும் அந்நாட்டு தேர்தல் விதிமுறைகளின்படி, பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்கள் வாக்களிக்கும் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத்துக்கும் 4 மாகாணங்களுக்கான சட்டசபைக்கும் நடைபெற்ற தேர்தலில் ஷங்லா மற்றும் வடக்கு வசிரிஸ்தான் பாராளுமன்ற தொகுதிகளில் மிக குறைவான எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.
ஆனால், வாக்குப்பதிவு நிலவரப்படி வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள மொத்தம் 77 ஆயிரத்து 537 பெண்களில் வெறும் 6 ஆயிரத்து 364 பேர் (8.91 சதவீதம்) மட்டுமே வாக்களித்திருந்தனர்.
இதேபோல், ஷங்லா தொகுதியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 49 பெண் வாக்காளர்களில் 12 ஆயிரத்து 663 பேர் மட்டுமே வாக்களித்தனர். இந்த எண்ணிக்கையும் மொத்த பெண் வாக்காளர்களில் பத்து சதவீதத்துக்கும் குறைவு என்பதால் இந்த இரு தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
இதைதொடர்ந்து, அங்கு மறுதேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் வேட்புமனு தாக்கலும், வாக்குப்பதிவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஷங்லா தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வேட்பாளர் இபாதுல்லா கான், வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் மோஹ்சென் ஜாவெத் வெற்றி பெற்றதாக முன்னர் முடிவுகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம். #ECPvoidpolls #femalevoterslowturnout
×

X