search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg 65"

    • மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்சாக சாப்பிடலாம்.
    • குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு அல்லது மதிய உணவு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த முட்டை 65 இருக்கும். இதுபோன்று மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து பொடிமாஸ், ஆம்லெட், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து சாப்பிட்டு இருப்போம், இன்று முட்டையை வைத்து 65 வித்தியாசமாக செய்வது எப்படி என பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 5

    மிளகுத்தூள்- கால் ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்

    மஞ்சள்தூள்- கால் ஸ்பூன்

    சோளமாவு- 1ஸ்பூன்

    கரம் மசாலா- 1ஸ்பூன்

    இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

    எலுமிச்சை- பாதியளவு

    அரிசிமாவு-1ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு சிறிதளவு

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் லேசாக தடவி முட்டைகளை உடைத்து ஊற்றிக் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி முட்டை கலவையை அந்த பாத்திரத்தை மேல் வைத்து ஒரு மூடி போட்டு அதை மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஆவியில் வேகவைத்த முட்டையை எடுத்து சிறு சிறு பீசாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு தட்டில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், சோள மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மீன் பொரிப்பதற்கு மசாலா ரெடி செய்வது போல் செய்து அதில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை பிரட்டி எடுக்க வேண்டும்.

    பின்னர் மற்றொரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து பொரித்தெடுக்கவும். மசாலா பிரியாமல் வரும். இப்போது மொறு மொறுவென முட்டை 65 ரெடி. நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சிக்கனில் 65 செய்வது போல் முட்டையிலும் 65 செய்யலாம். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 3
    சோளமாவு - 2 மேஜைக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    புட் கலர் - 1/4 தேக்கரண்டி
    தயிர் - 1 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு  



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு நான்காக வெட்டி வைக்கவும்.
       
    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கீழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
      
    ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும்.

    இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் வடிந்த பின்னர் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

    சுவையான முட்டை 65 ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×