search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg Fry"

    சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 4
    பட்டாணி - 100 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முட்டை, பட்டாணி பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
    புதினா -   சிறிதளவு
    மஞ்சள்தூள் -  அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.

    அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

    மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.

    இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.

    பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.

    முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    சூப்பரான அவித்த முட்டை பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×