என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Egg Gravy"
- முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.
- மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான்.
நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்த `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று முட்டை. முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதில் மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான். அதுவும் தபாக்களில் செய்யப்படும் முட்டை மசாலா அதன் சுவையே தனி தான். அந்த தாபா ஸ்டைல் ஸ்பெஷல் முட்டை குழம்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
வேகவைத்த முட்டை - 6
பெரிய வெங்காயம் - 2
தக்காளி விழுது - 3
பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
இஞ்சி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
கடலை மாவு - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்
கசூரி மேத்தி (உலர்ந்த வறுத்து பொடித்தது) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
எண்ணெய் - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 3-4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
மசாலாவிற்கு தேவையான வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்றாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நன்கு பழுத்த தக்காளியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கசூரி மேத்தியை போட்டு 30 வினாடிகள் வறுத்து ஆறவைத்து கரடுமுரடான பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டைகளை போட்டு வேகவைத்து அதன் ஓட்டை நீக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இப்போது வேகவைத்த முட்டைகளை அதனுடன் சேர்த்து குறைந்த வெப்பத்தில் 1-2 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து குறைந்த வெப்பத்தில் மற்றொரு 2 நிமிடங்களுக்கு வதக்கவும். இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி முழுவதுமாக வெந்து தொக்கு பதத்திற்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு சமைக்க வேண்டும்.
பிறகு அதில் 2 டீஸ்பூன் கடலை மாவை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து குறைந்த வெப்பத்தில் 2-3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி வதக்க வேண்டும். அடுத்து அதில் 200 மில்லி தண்ணீரைச் சேர்த்து அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வறுத்த கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு சமைக்கவும்.
தற்போது வறுத்துவைத்துள்ள முட்டைகளை அதில் போட்டு நன்கு கலந்து மூடி வைத்து சுமார் 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்க வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைத்து சமைத்து இறக்க வேண்டும்.
`தாபா ஸ்டைல் முட்டை மசாலா' தயார்… இதை நீங்கள் சப்பாத்தி, தோசை, இட்லி, ரொட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்