என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elan"

    ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யுவன், என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான் என்று கூறியிருக்கிறார். #PyaarPremaKaadhal
    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

    இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



    விழாவில் இசையமைப்பாளரும், படத்தின் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும் போது, 

    நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். 

    ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல், நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார். #PyaarPremaKaadhal #HarishKalyan #YuvanShankarRaja

    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் `பியார் பிரேமா காதல்' படக்குழு அடுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. #PyaarPremaKaadhal #HarishKalyan
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்'. இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். 

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29-ஆம் தேதி நடைபெறஇருப்பதாக படக்கழு அறிவித்துள்ளது. 

    சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #PyaarPremaKaadhal #HarishKalyan

    புதுமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் `பியார் பிரேமா காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #PyaarPremaKaadhal
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்'.  
    இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் இருந்து `ஹய் ஆன் லவ்' என்ற பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 



    படம் பற்றி யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது,

    இயக்குநர் இளன் என்னிடம் கதை சொல்லும் போதே, இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும், ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்குப் பிறகு மிக பெரிய அந்தஸ்துக்கு உயர்வார். ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் "high on love"  பாடல் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை பெற காரணம். 

    பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பேஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்று நான் உறுதியாக கூறுவேன் என்றார். #PyaarPremaKaadhal

    ×