என் மலர்
நீங்கள் தேடியது "Elctric Car"
- ஆடி Q8 இ டிரான் சீரிஸ் ஒன்பது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கின்றன.
- ஆடி Q8 இ டிரான் சீரிஸ் மாடல்கள் இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Q8 இ-டிரான் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் இ டிரான் மாடல்களுக்கான முன்பதிவை கடந்த வாரம் துவங்கியது. இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ஐந்து லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், இரு மாடல்களும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய ஆடி Q8 இ டிரான் சீரிஸ் விலை ரூ. 1 கோடியே 14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் எஸ்.யு.வி. மற்றும் ஸ்போர்ட்பேக் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கின்றன. இத்துடன் ஒன்பது வித்தியாசமான வெளிப்புற நிறங்கள், மூன்று இன்டீரியர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

அதன்படி மெடைரா பிரவுன், க்ரோனோஸ் கிரே, கிளேசியர் வைட், மிதோஸ் பிளாக், பிளாஸ்மா புளூ, சொனெரியா ரெட், மேக்னெட் கிரே, ஸ்லாம் பெய்க் மற்றும் மேன்ஹேட்டன் கிரே நிறங்களிலும், இன்டீரியரை பொருத்தவரை ஒகாபி பிரவுன், பியல் பெய்க் மற்றும் பிளாக் நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.
ஆடி Q8 இ டிரான் மாடல் 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இவை முறையே 340 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 408 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் வழங்கப்படும் 170 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது, காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 31 நிமிடங்களே ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.
விலை விவரங்கள்:
ஆடி Q8 50 இ டிரான் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம்
ஆடி Q8 50 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 20 ஆயிரம்
ஆடி Q8 55 இ டிரான் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரம்
ஆடி Q8 55 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.