என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elderly jewelry snatch"
மதுரை:
மதுரை அய்யர் பங்களா கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சிவபாக்கியம் (வயது 65).
இவர் உச்சபரம்புமேடு பகுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள் சிவபாக்கியத் தின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத் தில் தப்பிச் சென்று விட்ட னர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு என்.எஸ். கே. நகரைச் சேர்ந்த வர் சிவலிங்கம் (43) இவர் பாலிடெக்னிக் சாலையில் நடந்து சென்ற போது ஒரு வாலிபர் கத்திமுனையில் வழிமறித்து பணத்தை பறித்துச் சென்று விட்டார்.
இதுகுறித்து ஜெய்ஹிந்து புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மனைவி சாவித்ரி (வயது 65). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
பின்னர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர் கண்இமைக்கும் நேரத்தில் சாவித்ரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி இந்திரா (வயது67). நேற்று இரவு இவர் கார்மல் கார்டன் பள்ளி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியின் அருகில் சென்று முகவரி கேட்டனர். அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4½ தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த இந்திரா இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
மாதரவம்:
கொளத்தூர் அஞ்சுகம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மனைவி வசந்தா (வயது 65) இவர் இன்று அதிகாலை வீட்டின் கதவைத் திறந்து வெளியேவந்த போது மர்ம ஆசாமிகள் வசந்தா கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து கொளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர் புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் அதிகாலையில் இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடை பெறுவதால் பெண்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படுவதாக தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர் டவுன் தெருவைச் சேர்ந்தவர் மீனா (வயது 74). இவர் நேற்று அருகில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் உறவினரோடு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் மீனாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 70). இவரது மனைவி சாந்தகுமாரி (65). சம்பவத்தன்று இருவரும் கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டனர்.
காரை மண்டபம் எதிரே நிறுத்தி விட்டு தம்பதி மண்டபத்தை நோக்கி நடந்து வந்தனர்.
அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் இருந்தவர் சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் கொண்ட 2 தங்க சங்கிலியை பறித்தனர்.
அதிர்ச்சியடைந்த தம்பதி சத்தம்போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரக்குடி மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வன்னியாத்தாள் (வயது 75).
இவர் நேற்று மாலை விவசாய வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வன்னி கருப்பணசாமி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வன்னியாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து வன்னியாத்தாள் சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பரமக்குடி அருகே உள்ள கஞ்சியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (வயது 40). நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். இரவு வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த 3¼ பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். பரமக்குடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போரூர்:
கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் சந்திரா (76). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நாங்கள் போலீஸ். நகைகளை இப்படி அணிந்து செல்லக் கூடாது என்று கூறினார்கள். அதை நம்பி தான் அணிந்திருந்த நகையை கழற்றினார். உடனே அவர்கள் அதை வாங்கி ஒரு காகிதத்தில் பொதிந்து கொடுத்தனர்.
வீடு திரும்பிய அவர் காகிதத்தை பிரித்து பார்த்த போது அதில் நகை இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளச்சேரி:
சித்தாலப்பாக்கம் ஜெயா நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரவல்லி (66). இவர் நேற்று மாலை சித்தாலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்