என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Elderly woman dead"
- கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.
- முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (வயது 70). இவரது மனைவி கமலா (60).
இவர்கள் தள்ளுவண்டி மூலம் வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சாரங்கபாணி, கமலா ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூட ஆள் இல்லாமல் அவதியுற்று வந்தனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த 19-ந்தேதி அதிகாலை விஷம் குடித்தனர். முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சாரங்கபாணி உயிரிழந்தார். அவரது மனைவி கமலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 6 குழந்தைகள் பெற்றும் பராமரிக்க யாரும் இல்லாததால் வயது முதிர்ந்த கணவன், மனைவி விஷம் குடித்து இறந்து போனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் இளங்கோவன் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
- உடல் கருகி படுகாயமடைந்த வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போரூர்:
சென்னை மதுரவாயல் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி வசந்தா (வயது67).
இவர் நேற்று இரவு குளிர் காய்வதற்காக வீட்டின் அருகே குச்சிகளை சேர்த்து வைத்து நெருப்பு பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வசந்தாவின் சேலையில் தீப்பிடித்தது. உடல் முழுவதும் தீ வேகமாக பரவியதால் வசந்தா அலறி துடித்தார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் இளங்கோவன் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் உடல் கருகி படுகாயமடைந்த வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது.
- மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூரைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது70). இவர் இன்று காலை உறவினர் வீட்டிற்கு செல்ல மேல்மருவத்தூரில் இருந்து அச்சரப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்.
இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாயக்காள் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. க.விலக்கு அருகே மாலைப்பட்டி கிராமத்தில் பெய்த கனமழையின்போது அப்பகுதியில் இருந்த ஒருவீட்டின் சுவர் இடிந்துவிழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாயக்காள்(72) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சேர்ந்த சங்கர் என்பவரின் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீப்பிடித்தது.
- தீ அருகில் இருந்த 3 குடிசைகளுக்கும் பரவியது. இதில் 3 குடிசைகளும் எரிந்து நாசமானது.
திருவெற்றியூர்:
திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). மாடியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி அப்பகுதியில் நேற்று காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. காலை 11 மணி அளவில் திடீரென்று ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் பறந்து வந்து மல்லிகாவின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென் பரவி குடிசை முழுவதும் பற்றி எரிந்தது. மல்லிகாவால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கிக்கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீழ் வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் சேகர் உடனடியாக மேலே சென்று மல்லிகாவை மீட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. மூதாட்டி மல்லிகாவின் உடல் முழுவதும் கருகியது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ பாத்திரங்கள் போன்ற அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
உயிருக்கு போராடிய மல்லிகாவை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதேபோல் அன்னை சிவகாமி நகரில் சுந்தரி, மணி உட்பட 6 பேரின் வீடுகளில் பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளை கே.பி. சங்கர் எம்.எல்.ஏ, திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் அருள்தாஸ், கவுன்சிலர் திரவியம் வட சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் வி. தியாகராஜன் ஆகியோர் தீயை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.
வருவாய்த்துறையினர் திருவொற்றியூர் தாசில்தார் அருள் தலைமையில் நேரில் சென்று ஆய்வு செய்து 6 வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், 5 கிலோ அரிசி வழங்கினர்.
இதேபோல் அ.தி.மு.க சார்பில் அன்னை சிவகாமி நகரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2ஆயிரம் ரொக்கப் பணம் அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை முன்னாள் எம்.எல்.ஏ.கே. குப்பன் வழங்கினார்.
திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சேர்ந்த சங்கர் என்பவரின் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீப்பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 3 குடிசைகளுக்கும் பரவியது. இதில் 3 குடிசைகளும் எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். திருவொற்றியூர் பகுதியில் மட்டும் 10 குடிசை வீடுகள் எரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பலத்த தீ காயம் அடைந்த மூதாட்டியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சேலையூர் பராசக்தி நகர் சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பத்மநாதன். அவரது மனைவி சாந்தா (வயது 72). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இதனால் வீட்டில் கணவன்- மனைவி இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மாலையில் வீட்டிலிருந்த பூஜை அறையில் விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. அவரது கதறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.
பலத்த தீ காயம் அடைந்த மூதாட்டியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
- இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி தொட்டபுரத்தில் பெருந்துறையை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை சுற்றி வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க சோலார் பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலமலை கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜுக்கு, தொட்டபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி ராமன் போன் மூலமாக தொடர்பு கொண்டு சண்முகத்தின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேட்டரி மின் வேலியில் சிக்கி சுமார் 65 முதல் 70 வயதுடைய மூதாட்டி இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜ் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த செல்லம்மையை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சியை அடுத்த தென்கரை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமாரக்கண். இவரது மனைவி செல்லம்மை (வயது 72).
இவர் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக புலியூர்குறிச்சி சென்றார். அங்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். புலியூர்குறிச்சியில் சாலையை கடக்க செல்லம்மை முயன்றார்.
அப்போது அந்த வழியே நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி கார் வந்தது. அந்தக் கார் எதிர்பாராத விதமாக செல்லம்மை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். இதற்கிடையில் அவர் மீது மோதிய காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த செல்லம்மையை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை செல்லம்மை பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து குமாரக்கண் புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிளியாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.
இந்தநிலையில் கிளி ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து வள்ளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை வள்ளியம்மாள் பெரும்பாக்கத்தில் உள்ள கிளி ஆற்றில் துணி துவைத்து குளிக்க சென்றார். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். இதற்குள் வள்ளியம்மாள் தண்ணீரில் மூழ்கினார். சுமார் 100 மீட்டர் தூரத்தில் வள்ளியம்மாளை கிராம மக்கள் மீட்டனர்.
அப்போது அவர் இறந்திருப்பது தெரிந்தது. இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பலியான வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்