என் மலர்
நீங்கள் தேடியது "Election 2019"
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #Parthiban #Election2019
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ’பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கூறி இருப்பதாவது:-
‘மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு, தேர்தல் என்பது தேத்துதல் (பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு...
மாம்பழமோ? மாபெரும் பழமோ?
— R.Parthiban (@rparthiepan) April 16, 2019
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,,,,
தேர்தல்= தேத்துதல் (பணம்)
வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட
திமிங்கல வேட்டைக்கே.
காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு!
ஓட்டைப் போடாதீர்கள் ஓட்டைப் போடாதீர்கள் வல்லரசாகப் போகும் இந்தியாவின் கூகுள் வரை படத்தில் ஓட்டைப் போடாதீர்கள் தேர்தல் வந்துடுச்சி துட்டுக்கு ஓட்டைப்போட்டு நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வில் (ஸ்கேன் ரிப்போர்ட்டில்) ஓட்டைப் போடாதீர்கள்’
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.