என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Election Commission of India"
- கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 3 மாநிலங்களில் வரும் 13-ந்தேதி நடைபெற இருந்த 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* 3 மாநிலங்களில் 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* இந்த 3 மாநிலங்களில் வரும் 13-ந்தேதி நடைபெற இருந்த 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவ.20-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
By-polls in Assembly Constituencies in Kerala, Punjab and Uttar Pradesh rescheduled from November 13 to November 20 due to various festivities pic.twitter.com/P2eaNMDhzb
— ANI (@ANI) November 4, 2024
- இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திம் வருகிறது.
- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும்.
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரத சாகுவுக்கு மாநில அரசுப் பணியான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுகிறார். புதிய தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்ய பிரதசாகுவுக்கு பதிலாக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்காக தமிழக பிரிவு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 பேரின் பெயர்களை கொண்ட பட்டியலை மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு செயலாளர் அளவிலான 3 பேர் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியே, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை நடத்துவார். எனவே அதற்கேற்ப தேர்தலை மனதில் வைத்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது.
- பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.
சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
அதில், பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
இந்நிலையில் புதிய தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவொன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சுக்பீர் சந்துவையும் ஞானேஷ் குமாரையும் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களாக நியமித்திருக்கிறார் மோடி. ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை உருவாக்க முக்கியப் பங்காற்றியவர் ஞானேஷ் குமார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்காக அமித் ஷாவுக்குக் கீழ் பணியாற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களும் இதை விமர்சித்துள்ளார். அதில்,
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து, தலைமை நீதிபதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என்று மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே புதிய தேர்தல் ஆணையர்களை மோடி நியமித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையர் பதவிகளில் பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
- தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.
- பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்க அனைத்து கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலையும், தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 20 பேர் கொண்ட பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் முடியும் தேதிக்குள் இந்த பட்டியலை அளித்திருக்கவேண்டும்.
அதன்படி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளித்துள்ளன. தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.ம.மு.க., புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4-ந்தேதி மாலை நிலவரப்படி, அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் பட்டியலை இன்றுவரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேலும் பல கட்சிகள் அதற்கான பட்டியலை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-
நட்சத்திர பேச்சாளர் பட்டியலை பல்வேறு கட்சிகள் வழங்கி உள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல்களில் யாருக்கு அனுமதி அளிப்பது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டது.
அந்த 2 பட்டியல்களையும் தங்களது பார்வைக்கு அனுப்பும்படி தேர்தல் ஆணையம் கேட்டது. எனவே அவற்றை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். அ.தி.மு.க. கட்சி சார்பில் எந்தப் பட்டியலுக்கு அனுமதி தர வேண்டும்? என்ற முடிவை இந்திய தேர்தல் ஆணையம் தான் எடுக்கும்.
எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொடுத்த பேச்சாளர் பட்டியல் ஏற்கப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.
- அரசியல் கட்சிகள் மதத்தின் பெயர், சின்னங்களை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருகின்றன. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பல கட்சிகள் மதத்தின் பெயரையும், அடையாளத்தையும் பயன்படுத்துகின்றன. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. மதத்தின் பெயரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முரளி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை இன்று விசாரித்தது.
அரசியல் கட்சிகள் மதத்தின் பெயர், சின்னங்களை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய விசாரணையின் போது தேர்தல் ஆணையம் இது தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் கமிஷனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு மோடி கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்து பத்ரிநாத் சென்று அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டார். இன்று பிற்பகல் மோடி டெல்லி திரும்புகிறார்.
அவர் கேதார்நாத் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த காட்சி டிவி-க்களில் ஒளிபரப்பானது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதில் பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத் யாத்திரை டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. அதன் மூலம் மோடி தேர்தல் விதிமுறையை மீறியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிக் ஓ’பிரைன் கூறுகையில் ‘‘கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 17-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த போதிலும், இரண்டு நாட்களாக மோடியின் கேதார்நாத் யாத்திரை தேசிய மற்றும் உள்ளூர் டிவி-க்களில் ஒளிபரப்பானது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தேர்தல் விதிமுறையை மீறியதாகும்.
அவரது செயல்பாடுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ஒருவகையில் வாக்காளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈர்க்கக்கூடிய செயலாகும். மோடி பின்பக்கத்தில் இருந்து மோடி, மோடி என்ற கோஷம் எழுப்பப்பட்டது’’ என்றார்.
இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, இந்திய பாதுகாப்புப்படை வீரர்களை மோடியின் படை என்று குறிப்பிட்டார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம், மேற்கண்ட சம்பவங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை என்ற முடிவு எடுத்தது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது.
மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்கள் மீதான புகார் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் மோடி- அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
அதில் ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்று கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி இன்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “தபால் வாக்குகள் அளிக்க 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் வாக்களித்தனர்.
12915 பேரின் வாக்குகள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாததாலும், அவர்களுடைய பிறந்த நாள் உள்ளிட்ட சில தகவல்கள் எங்களிடம் உள்ள ஆவணங்களுடன் ஒத்துப்போகாததாலும் நிராகரிக்கப்பட்டன. 39, 7291 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டிருந்தது.
அதன்பின் தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.
இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனால் தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. காலியான 6 மாதத்துக்குள் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் விதி.
இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தகுதி நீக்க வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து யாரும் அப்பீல் செய்யவில்லை. அப்பீல் செய்ய கால அவகாசம் ஜனவரி 25-ந்தேதி வரை உள்ளது. இதனால் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் திருவாரூர் தொகுதி மட்டுமே தேர்தல் அறிவிப்புக்கு சாதகமாக இருந்தது.
ஆனால் தேர்தல் நடைபெறும் காலத்தில் புயல் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டு இருந்ததால் இதனை காரணம் காட்டி தமிழக அரசு அளித்த அறிக்கையால் திருவாரூர் தேர்தல் அறிவிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அறிக்கை கேட்டு இருந்தார். அவரும் விரிவான அறிக்கை ஒன்றை டெல்லி தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறித்தும் 18 தொகுதி உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து இதுவரை யாரும் அப்பீல் செய்யாதது குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்தும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் முடிந்த பின்புதான் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும்.
இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு கிளையில் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், பிப்ரவரி இறுதிக்குள் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்தார். எனவே பிப்ரவரி இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந் தேதி முடிந்ததும் தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #ElectonCommission #TNElections
திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு வந்த அழுத்தங்களே இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன.
இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு காரணங்கள் குறித்து அவர் கூறியதாவது :-
யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
திருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #OPRawat #ElectionCommissionofIndia
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்