என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "election victory"
- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.
இதையடுத்து வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இன்று வயநாடுக்கு வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.
பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.
பின்னர் எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார்.
அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது.
நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல.
ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.
- முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முத்துப்பேட்டை:
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.
இதனை கொண்டாடும் வகையில் முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பட்டாசு வெடித்தனர்.
அதேபோல் முத்துப்பே ட்டை பெரிய கடைதெரு விலும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கி பெற்றியை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக், மாவட்ட செயலாளர்கள் ஜெகபர் அலி, சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் தக்பீர் நெய்னா முகமது, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ஜேம்ஸ், நகர துணைத்தலைவர் ஹசன், நகர பொருளாளர் குலாம் ரசூல், நிர்வாகிகள் ஜிபிலி, இஜாஸ், ஷகீல், சேக்தாவூது, அப்சல், தமீம் அன்சாரி, முஜமில் உட்பட ஏராளமாேனார் கலந்துக் கொண்டனர்.
முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைதெருவில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் வடுகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு களும் வழங்கினர்.
லக்னோ:
5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆகிய மூன்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதாவிடம் இருந்து அந்த கட்சி ஆட்சியை பறித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த அமோக வெற்றியால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மனமாற்றம் அடைந்துள்ளார்.
5 மாநில தேர்தலில் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். டெல்லியில் நடந்த எதிர்க் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள வில்லை.
சத்தீஷ்கரில் அஜித்ஜோகி கட்சியுடன் கூட்டணி அமைத்து மாயாவதி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தில் 2 இடங்களிலும், ராஜஸ்தானில் 6 தொகுதியிலும், தெலுங்கானாவில் 1 இடத்திலும் பகுஜன் சமாஜ்கட்சி வெற்றி பெற்றது.
சத்தீஷ்கர், ராஜஸ்தானில் மாயாவதியால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இதனால் காங்கிரசின் இந்த வெற்றியை அவர் பெரிதாக கருதுகிறார். இதனால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக மாயாவதி இன்று அறிவித்தார். ராஜஸ்தானிலும் தேவை ஏற்பட்டால் ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்தார்.
இதன் மூலம் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதில் உறுதி ஏற்பட்டுள்ளது. மாயாவதிக்கு பல மாநிலங்களில் செல்வாக்கு இருப்பதால் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உருவாக்கும் அணியில் கூடுதல் பலமாக அமையும் எள்பதில் சந்தேகமில்லை.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ள கட்சியாகும். ஆனால் அவர் டெல்லியில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அகிலேஷ் யாதவும் அறிவித்துள்ளார்.
இதனால் பாராளு மன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பா.ஜனதாவை எதிர்க்கும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் மாயாவதியும், அகிலேசும் இணைந்து பா.ஜனதாவை ஏற்கனவே வீழ்த்தி இருந்தனர். 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று இணைக்கும் பணியில் ராகுல் காந்தி, சந்திர பாபு நாயுடு ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த அணியில் பல கட்சிகள் இருக்கும் நிலையில் மாயாவதியும், அகிலேஷ்யாதவும் இணைய இருப்பது கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். #mayawati #congressparty #electionvictory
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்