என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Cars"

    • XEV9e மற்றும் BE6 மின்சார கார்கள் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன.
    • மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன. இதன் முன்பதிவு மதிப்பு மட்டும் ரூ.8,472 கோடி (Ex-Showroom) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொட்டரின் டார்க்விசை 380Nm ஆகும்.

    மஹிந்திரா BE 6 காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் ஒன்று 59kWh - ரூ. 18.90 லட்சம்

    பேக் ஒன்றுக்கு மேல் 59kWh - ரூ. 20.50 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 24.50 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 26.90 லட்சம்

    மஹிந்திரா XEV 9e காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் 1 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 24.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 27.90 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 30.50 லட்சம்

    மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XEV 9e மின்சார கார்களின் பேக் 3 மாடல் இந்தாண்டு மார்ச் மாதத்திலும் பேக் 3 செலக்ட் மாடல் ஜூன் மாதத்திலும் பேக் 2 மாடல் ஜூலையிலும் பேக் 1 மற்றும் பேக் ஒன்றுக்கு மேல் மாடல் ஆகஸ்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
    • கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.

    ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.

    இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.

    அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள சக்கன் தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்துக்கு ஏற்ப வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக இந்தியா உருவெடுக்கலாம் என்பதால் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கம்பஷன் இன்ஜின்களுக்கான தயாரிப்பு பணிகளை பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தை நிறைவேற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

    மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. இவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்தலாம். இத்துடன் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவாக இருக்கும்.


    கோப்பு படம்: மெர்சிடிஸ் பென்ஸ் EQ கான்செப்ட்

    அடுத்த ஆண்டு வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய பிரான்டு EQ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பிரான்டு ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை வெளியிட தயார் நிலையில் இருக்கிறது. EQ பிரான்டு மாடல்கள் முழுவதும் எதிர்கால பேட்டரி-எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

    இதன் பிளாட்ஃபார்ம் புதிய ஒற்றை வடிவமைப்பை சார்ந்து இருக்கும் என்றும், இதே போன்ற வடிவமைப்பு அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய மாடல்களில் சில வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×