search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electronic Meter"

    • ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
    • மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக இந்த தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

    'எம்.எஸ்.எம்.இ' என்று அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். 25 சதவீத கூடுதல் மின்கட்டணத்தை குறைக்க கோரி வலியுறுத்தினார்கள்.

    இதனால் தமிழக அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 25 சதவீத கூடுதல் கட்டணத்தை 15 சதவீதமாக அரசு குறைத்தது. மீதி 10 சதவீதத்தை மின் வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கியது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உருவானது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டராக மாற்ற உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. அப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை தனியாக கணக்கிட்டு அதன்படி 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதன்படி இப்போது சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவன தொழிற்பேட்டைகளில், எலக்ட்ரானிக் மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக மார்ச் முதல் வாரம் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் உள்ள குறு-சிறு தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.

    அதேபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.

    அதன் அடிப்படையில் 25 சதவீதம் கட்டணம் கூடுதலாக கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதற்காக சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.

    ×