என் மலர்
நீங்கள் தேடியது "elevator"
- ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
- பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் விபத்து.
சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
லிப்டை சரி செய்ய முயன்றபோது, லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார்.
- சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது, லிஃப்டில் படம் படிக்கப்பட்டுள்ளது.
பிறகு, பிரியங்கா சோப்ரா லிஃப்டில் இருந்து வெளியில் வரும்போது அவரது குதிகால் லிஃப்டில் சிக்கிக் கொண்டது.
இதனால் பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார். இருப்பினும், அவர் தாமாக நிலைக்கு வந்தார் இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. அதில், பிரியங்கா சோப்ராவின் கால் செருப்பு லிஃப்டில் சிக்கியது. பிறகு, அவர் செருப்பை லாவகமாக எடுத்து, தனது போட்டோஷூட்டை தொடரும் காட்சி பதிவாகியுள்ளது.