என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emergency landing"

    • இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக தகவல்.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து.

    டெல்லி வரவேண்டிய 100-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தாய்லாந்தின் பூகெட்டில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான புறப்பாடு தாமதமாகி இருக்கிறது. பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதன்பிறகு தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மேலும், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நவம்பர் 16 ஆம் தேதி அறிவித்து இருக்கிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் இதர உதவிகளுக்கு ஏர் இந்தியா வழிவகை செய்வதாக அறிவித்து இருக்கிறது.

    சில பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்குவது மற்றும் வேறு தேதியில் பயணம் மேற்கொள்வது பற்றி பயணிகளுக்கு ஏர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. பயணிகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் பயணத்திற்குத் தயார்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் ஃபூகெட்டில் தரையிறங்கியது, அதன்பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. எனினும் பயணிகள் ஃபூகெட்டில் சிக்கிக்கொண்டனர்.

    முன்னதாக, விமான நிறுவன வட்டாரம், "பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுமார் 40 பேர் இன்னும் ஃபூகெட்டில் உள்ளனர், அவர்கள் இன்று மாலை திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்று கூறினார்.

    சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    சென்னை:

    திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

    விமானத்தை தரையிறக்க சென்னை விமான நிலையம் அனுமதி அளித்தது. அத்துடன் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.



    தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் சென்ற ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #RamVilasPaswan #Helicopter
    கயா:

    பீகார் மாநிலம் பெலகஞ்ச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான், பா.ஜனதா கட்சியை சேர்ந்த பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி ஆகியோர் ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.

    அப்போது மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் அந்த ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ராம்விலாஸ் பஸ்வான், சுஷில் மோடி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #RamVilasPaswan #Helicopter 
    124 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் பகுதியில் பறவை மோதியதால் பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia
    பாட்னா:

    கொல்கத்தாவிலிருந்து டெல்லி நோக்கி இன்று பிற்பகலில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 124 பயணிகள் இருந்த இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எஞ்சின் பகுதியில் பறவை மோதியது. இதனால், பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானத்தில் உள்ள பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், தொழில்நுட்ப பணியாளர்கள் விமானத்தை சரிசெய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ArmyHelicopter
    தேஸ்பூர்:

    அசாம் மாநிலம் தேஸ்பூர் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் பைலட் உள்பட் மூன்று ராணுவ அதிகாரிகள் பயணித்தனர்.

    இந்நிலையில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த பைலட், லக்கிம்பூர் பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று ராணுவ அதிகாரிகளையும், பைலட்டையும் பத்திரமாக மீட்டனர். #ArmyHelicopter
    ×