என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Engineer Dead"
- நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
- விபத்து தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன் மகன் பிரசாந்த் (வயது 28). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்த பிரசாந்த் வேலை நிமர்த்தமாக இன்று காலை ஈரோட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது கருங்கல்பாளையம் அடுத்துள்ள கிருஷ்ணம்பாளையம் சின்னப்பா லே அவுட் அருகே ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் பிராசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது.
- விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி தரமணியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 5மணி அளவில் பஸ் மூலம் சென்னை திரும்பினார். அசோக் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் சிக்னல் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ரிஷி கவுதம் பின்னர் 100 அடி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியே கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரிஷிகவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ரிஷிகவுதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார்.
- விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் காங்கேயத்தான் (வயது 22). பொறியியல் படித்துள்ளார். இவர் நேற்று பகல், தனது நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகியோருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சேலம்-விருத்தாசலம் ரெயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் ரெயில் வந்தது. இதைப்பார்த்த காங்கேயத்தான் ஓடும் ரெயில் முன்பாக சென்று செல்பி எடுக்க முயன்றார்.
இதனிடையே வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காங்கேயத்தான் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரெயில் அருகே சென்று செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த வழக்கம் விபரீதித்தில் முடிந்துள்ளதாக அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்