என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "engineer student death"
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டுசாமி. இவரது மகன் சாய்ஹரிகரன் (வயது 22). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் அவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று இரவு சாய் ஹரிகரனும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் முத்துராஜ் (20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் புறப்பட்டுச் சென்றனர்.
இரவு 10 மணி அளவில் அவர்கள் மயிலாடியை கடந்து சிறிது தூரம் வந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து பெருமணல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாய்ஹரிகரனும், முத்துராஜூம் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த சாய்ஹரிகரனை அந்த பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் ஜெகதீஷ் (30) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர் பொன்மனை பகுதியைச் சேர்ந்தவர். விபத்தில் பலியான முத்து ராஜ், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆவார்.
நாகர்கோவிலில் நடந்த மற்றொரு விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். இளங்கடை பாவாகாசீம் நகரைச் சேர்ந்தவர் பீர்முகம்மது (82). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பறக்கை நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பீர்முகம்மது பலியானார்.
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அன்புச்செல்வம் (வயது19). நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்த அன்புச்செல்வம் இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் கப்பலூர் ரெயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் அன்புச்செல்வம் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மாணவர் அன்புச்செல்வம் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழக்கரை அலவாக்கரையைச் சேர்ந்தவர் பொன்ராஜ். வயர்மேன். இவரது மகன் நாக அர்ஜூன் (வயது 19). கீழக்கரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக் கொண்டு தனியார் நிறுவனத்தில் பகுதிநேர பயிற்சி பெற்று வந்தார்.
நேற்று இரவு இவர், பயிற்சியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஏர்வாடி முக்கு ரோடு அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாக அர்ஜூன், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பைக் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்