search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Evicted"

    • இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
    • மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 7.4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில், நாடு முழுவதும் 1.53 லட்சம் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டுள்ளது என்று ஹவுசிங் அண்ட் லேண்ட் ரைட்ஸ் நெட்வொர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    23 மாநிலங்கள், 4 யூனியன் பிரேதேசங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் நாடு முழுவதும் இடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும், வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், நீதிமன்ற உத்தரவுகளால் சுமார் 3 லட்சம் பேர் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2022ல், நீதிமன்ற உத்தரவுகளின் விளைவாக 33,360 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், 2023 இல் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    2022 ஆம் ஆண்டில் 46,371 வீடுகள் இடிக்கப்பட்டு 2.3 லட்சம் பேர் வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2023 ஆம் ஆண்டில் 107, 499 வீடுகள் இடிக்கப்பட்டு 5.15 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

    குர்கான், டெல்லி, அகமதாபாத், அயோத்தி, சூரத் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெரும்பாலான ஏழைகள், தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான மக்களிடம் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கும், அவர்களின் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கும் போதுமான காரணங்களை அதிகாரிகள் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    ×