என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVM"

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலமாக 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இந்நிலையில், அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.

    அவர் லண்டனில் இருந்து ‘ஸ்கைப்’ மூலமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றினேன். 2014-ம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த குழுவில் நானும் இருந்தேன். அப்போது, அந்த எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? என்றும், எப்படி செய்யலாம்? என்றும் கண்டறியுமாறு எங்களை மின்னணு கழகம் கேட்டுக்கொண்டது. அதன்படி, அந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்தது.

    இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார். அதை ‘கொலை’ என்று வழக்கு பதிய முயன்ற என்.ஐ.ஏ. அதிகாரியும் கொல்லப்பட்டார். என் குழுவினரும் கொல்லப்பட்டதால், நான் பயந்துபோய் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

    பா.ஜனதா மட்டுமின்றி, காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, தேர்தல் தில்லுமுல்லு விவகாரத்தை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    அதே சமயத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் உறுதிபட தெரிவித்துள்ளது.
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருட்டு இயந்திரங்கள் என குறிப்பிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவற்றை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

    இந்த கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியதாவது:

    'உண்மையை சொல்லப் போனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாமே திருட்டு இயந்திரங்கள். உலகில் தற்போது எந்த நாட்டு தேர்தல்களிலும் புழக்கத்தில் இல்லாத இந்த திருட்டு இயந்திரங்களை நமது நாட்டில் இருந்தும் ஒழிக்க வேண்டும்.



    இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையாளரை அணுக வேண்டும், மின்னணு இயந்திர வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வெளிப்படைத்தன்மை கொண்ட வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டார்.

    'எந்த தனிமனிதரையும் (மோடி) ஒழிப்பது நமது எண்ணமல்ல. நமது நாட்டை காப்பாற்றுவதும் நமது நாட்டின் விடுதலைக்காக பலர் புரிந்த தியாகங்களை கவுரவிப்பதும்தான் நமது நோக்கமாகும்.

    காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான் காரணம். மதத்தின் அடிப்படையில் மக்கள் பிளவுப்படுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானியர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

    ஆனால், அதற்கு நேர்மாறாக அங்குள்ள மக்கள் அனைவரும் இந்தியர்களாக வாழ்வதற்குதான் ஆசைப்படுகிறார்கள். நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது தாய்நாடான இந்தியாவை நான் நேசிக்கிறேன்.

    முத்தலாக் தடுப்பு சட்ட மசோதாவுக்காக பாராளுமன்றத்தில் வரிந்துக்கட்டிக் கொண்டு குரல் கொடுத்த பா.ஜ.கவினர் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இருந்து விட்டனர்.

    பா.ஜ.க. அரசை வெளியேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்காக நாம் ஓரணியில் திரண்டு, ஒருமித்த குரலில் போராடுவோம். பிரதமர் யார்? என்பதை தேர்தல் முடிவுக்கு பிறகு தீர்மானித்து கொள்ளலாம். இனி அமையும் புதிய அரசு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்’

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM 
    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால் ரூ.33,200 செலவாகும் என சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. #LawPanel #SimultaneousPolls
    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஒரே நேர தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றியும் கட்ட கமிஷன் கூறியிருந்தது.

    அது குறித்து சட்ட கமிஷன் தனது அறிக்கையில், ‘பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால், 12.9 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 12.3 லட்சம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலகுகள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து இருக்கிறது. இந்த 3 அலகுகளும் சேர்ந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.33,200 செலவாகும். அந்தவகையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக ரூ.4,555 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதைப்போல அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியதாகவும் சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. #LawPanel #SimultaneousPolls 
    ×