என் மலர்
நீங்கள் தேடியது "Ex Congress MLA arrested"
நகரி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கா ரெட்டி. இவர் 2004-ம் ஆண்டு தனது மனைவி நிர்மலா மகள் ஜெயலட்சுமி, மகன் பரத் சாய் ரெட்டி ஆகியோர் பேரில் 3 பேரை ஐதராபாத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றார். அதன் பின் அவர் மட்டும் நாடு திரும்பி இருந்தார்.
இந்த நிலையில் ஜக்கா ரெட்டி போலி பாஸ் போர்ட் மற்றும் விசா மூலம் 3 பேரைதனது மனைவி, மகள், மகன் பெயரில் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக அழைத்து சென்றிருப்பதாக ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்கா அரசிடம் இருந்து இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக சென்றவர்கள் குறித்த ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்தோ ஜக்கா ரெட்டி போலி பாஸ்போர்ட்டில் 3 பேரையும் அழைத்து சென்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் ஐதராபாத் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன் பின் இன்று அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வடக்கு மண்டல போலீஸ் அதிகாரி சுமதி கூறியதாவது:-
ஜக்கா ரெட்டி தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து சட்டவிரோதமாக அவர்களை அமெரிக்கா விற்கு அழைத்து சென்றுள்ளார். இதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களிடம் ரூ.15 லட்சம் பணம் பெற்று கொண்டு இருக்கிறார் என்றார்.
ஜக்கா ரெட்டி அழைத்து சென்ற 3 பேர் அமெரிக்காவில் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. #Fakepassport #ExMLAsarrest