என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ex girlfriend"
- ஆம்பர் ரோஸ், 7 வருடங்கள் மைக்கேல் ரிக்கருடன் நட்பில் இருந்தார்
- சிறைக்கு சென்ற ரிக்கர், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் லின்கன் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் 63 வயதான லெசா ஆர்ம்ஸ்ட்ராங் ரோஸ் (Lesa Armstrong Rose), அவர் கணவர் டெட்டி (Teddy) மற்றும் அவர்களது மகள், ஆம்பர் ரோஸ் (Amber Rose).
ஆம்பர் ரோஸ், சுமார் 7 வருடங்கள் 36 வயதான மைக்கேல் ஸ்டீவன் ரிக்கர் (Michael Steven Ricker) எனும் ஆண் நண்பருடன் நட்பில் இருந்தார். பிறகு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
சில மாதங்களுக்கு முன் ரிக்கர், ஆம்பர் ரோஸை தாக்கியுள்ளார். இதனையறிந்த ரோஸின் தந்தை, ரிக்கரை அழைத்து விசாரித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதையடுத்து ரிக்கர், டெட்டியை துப்பாக்கியால் சுட்டார். இதில் டெட்டி பலத்த காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ரிக்கர், காவல்துறையின் தேடலில் சிக்கினார். கைது செய்யப்பட்ட ரிக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து சில நாட்களில் ரோஸ் வீட்டிற்கு மீண்டும் ரிக்கர் வந்தார். அப்போது அங்கு ஆம்பர் இல்லை. ஆனால், ஆம்பர் ரோஸின் தாயார் லெஸா இருப்பதை கண்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்தார். இதில் லெஸா உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து காவல்துறையினரின் தீவிர தேடலில் மீண்டும் ரிக்கர் சிக்கினார்.
இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் நீதி அமைப்பில் உள்ள சுலபமான வழிகளில் ரிக்கர் போன்றவர் தப்பித்து வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதை ஆம்பர் ரோஸ் விமர்சித்துள்ளார்.
அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
ரிக்கர் எங்கள் குடும்பத்தை தங்கள் குடும்பமாக நினைத்தான். நாங்களும் ரிக்கரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துத்தான் பழகி வந்தோம். உண்மையில் நான் நீதித்துறையின் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ஜாமீனில் வந்தவனால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. தேவையற்ற விஷயங்களை குறித்து நீதித்துறை கவலைப்படுகிறது. சிறிதளவு போதை பொருள் வைத்திருப்பவர்கள் எளிதாக ஜாமீனில் வர முடிவதில்லை. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் வெளியே சுலபமாக வந்து மீண்டும் கொலை செய்கிறான்.
இவ்வாறு ரோஸ் தெரிவித்தார்.
ஆம்பர் ரோஸின் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் பல பயனர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
- முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி கொத்தனார் அவரை கற்பழித்தார்.
- திருமணம் செய்த மறுத்தவரை புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகள் உள்ளனர். குணசேகரன் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பிறகும் முன்னாள் காதலியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
33 வயதான அந்த பெண்ணுக்கு திருமணமாக வில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவரை கற்பழித்தார். இதில் 5 மாத கர்ப்பிணியானார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவர் கேட்டபோது மறுத்து விட்டார். இதனால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்தபோது அதே மையத்தில் படித்த திருச்சியைச் சேர்ந்த வருண் குமார் (27) என்பவருடன் காதல் ஏற்பட்டது.
பின்னர் வருண்குமார் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பயிற்சிக்காக புதுடெல்லி சென்றார். பிரியதர்ஷினியும், ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்காத நிலையில் வருண் குமாருக்கு உதவுவதற்காக டெல்லி சென்று தங்கினார்.
இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு வருண் குமார்- பிரியதர்ஷினி இடையேயான காதலை இருவரது பெற்றோரும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். 2012-ம் ஆண்டு திருமணம் செய்ய தேதியும் குறிக்கப்பட்டது.
வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு வருண்குமாரின் பெற்றோர், பிரியதர்ஷினி மற்றும் அவரது பெற்றோரிடம் ரூ.50 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், பி.எம். டபிள்யூ. கார் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டனர்.
வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் நடக்கும், இல்லையெனில் திருமணம் கிடையாது என்று உறுதியாக தெரிவித்து விட்டனர். மேலும் வருண்குமாரும் திருமணத்துக்கு மறுத்து விட்டார்.
இதனால் திருமணம் நின்றது. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பிரியதர்ஷினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். இந்த வழக்கில் வருண்குமார் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.
அவரது மனுவை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்து விட்டதால் போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து வருண் குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் மீதான வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்து வருண்குமார் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கின் முழு விவரங்களையும் ஆராய்ந்து அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.
இதற்கிடையே வருண் குமார்- பிரியதர்ஷினி திருமணம் நின்ற பின்பு வருண்குமார், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரையும், பிரியதர்ஷினி வக்கீல் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்