search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam fee"

    • சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
    • தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதால் நிறுத்தி வைப்பு.

    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கூட்டண உயர்வு ந நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை கிண்டியில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது. தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும்.

    தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். #Congress #RahulGandhi #OnlineFee
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வோம். மக்கள் நலனில் சுகாதார பிரச்சினை முக்கியமானதாக உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு சுகாதாரம் உரிமையாக்கப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கான அரசு ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #RahulGandhi #OnlineFee
    ×