search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exoplanet"

    சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகத்தில் தண்ணீர் மற்றும் அதிக அளவிலான உலோகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    லண்டன்:

    இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் ஆஸ்ட்ரோ பிஸ்கா கனாரியாஸ் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரான் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சூரிய குடும்பத்துக்கு வெளியே ‘வாஸ்ப்-127பி’ என்ற புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர். அது ராட்சத அளவிலான வாயுக்கள் அடங்கிய கிரகமாகும். ஜூபிடர் கிரகத்தை விட 1.4 மடங்கு அகலம் அதிகம் உள்ளது. 20 சதவீதம் மட்டுமே பெரியது.

    இந்த கிரகத்தில் அதிக அளவிலான உலோகங்கள் உள்ளன. தற்போது சோடியம், பொட்டாசியம், லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு தண்ணீர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    ×