என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "extension of time"
- ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுப்பு.
- சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .
அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.
இந்நிலையில், பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா பயணிகள் தென்காசி பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவியில் ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 2024-ம் ஆண்டுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் கூறியதாவது:-
பிறப்பு பதிவு குழந்தை யின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது.
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றி தழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த குழந்தை யின் பிறப்பு பதிவு செய்யப் பட்ட 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாள ரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறி வுரைபடி, 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப் பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய பிறப்பு, இறப்பு பதிவா ளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
உடுமலை :
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். முன்பு பதிவு செய்தவர்கள், விருப்பங்களை மாற்றி வரிசைபடுத்திக்கொள்ளலாம். இறுதியாக, வரிசை படுத்தப்பட்டுள்ள பட்டியல் இடஒதுக்கீடுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.மேலும் முழுமையான விபரங்களை, http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சந்தேகங்கள் இருப்பின் 94886 35077, 94864 25076 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15-ந்தேதி வரையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ந்தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான சிறு பான்மையின மாணவ- மாணவிகள், பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30-ந்தேதி வரையிலும் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்